Home
News

புது CIBIL SCORE ரூல்ஸ்.. லோன் வாங்க போறவங்க வாங்குனவங்க கவனம்.. ஆதார், PAN, பாஸ்போர்ட் ரெடியா வைங்க!

இந்திய அரசாங்கத்தின் நிதி அமைச்சகம் (Ministry of Finance) ஆனது சிபில் ஸ்கோர் (CIBIL Score) தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பின் வழியாக, சிபில் ஸ்கோர் பிளாட்பார்மின் ரிஜிஸ்ட்ரேஷன் செயல்முறை (Registration Process) மற்றும் லாக்-இன்னில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

அது என்ன மாற்றம்? நிதி அமைச்சகம் ஆனது டிரான்ஸ்யூனியன் சிஐபிஎல் நிறுவனம் (TransUnion CIBIL) ஆனது, சிபில் ஸ்கோர் தளத்திற்கான பதிவு செயல்முறையின் போது பயனர் அடையாளத்திற்காக ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை (Aadhaar based authentication) பயன்படுத்த அனுமதித்து புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

புது CIBIL SCORE ரூல்ஸ்.. லோன் வாங்க போறவங்க வாங்குனவங்க கவனம்!

இருப்பினும், டிரான்ஸ்யூனியன் சிஐபிஎல் நிறுவனமானது ஆதார் அட்டை மூலம் அங்கீகார செயல்முறையை தொடங்குவதற்கு முன், பயனரின் அனுமதியை பெற வேண்டும் என்பதையும் நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த முடிவு யுஐடிஏஐ (UIDAI) உடன் கலந்து ஆலோசித்த பின்னர் வருவதாக மெய்டி (MeitY) தெரிவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அறிவிப்பில், யுஐடிஏஐ என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (Unique Identification Authority of India) கலந்தாலோசித்த பிறகு, டிரான்ஸ்யூனியன் சிஐபிஎல் லிமிடெட் நிறுவனமானது ஆதார் எண் வைத்திருப்பவரின் அடையாளத்தை நிறுவுவதற்கான அங்கீகாரத்தின் போது ஆதார் எண்ணை பயன்படுத்த அனுமதிக்கப்படலாம் என்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Electronics and Information Technology - MeitY) தெரிவித்துள்ளது.

இந்த அனுமதி நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகார விதிகள், 2020 மற்றும் ஆதார் சட்டம், 2016 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. ஆம் / இல்லை அல்லது / மற்றும் இ கேஒய்சி அங்கீகார வசதிகளை பயன்படுத்தி பயனர்களின் கடன் தகவல் அறிக்கைகளை (Credit information reports) அணுகுவதற்காக ஆதார் அங்கீகாரம் செய்யப்படும் என்றும், இந்த நோக்கத்திற்காக ஆதார் அங்கீகாரத்தின் செயல்திறன் தன்னார்வ அடிப்படையில் இருக்கும் என்றும் வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி சிபில் தளத்தில் பதிவு மற்றும் லாக்-இன்னில் பயனர்களின் அடையாளத்தை நிறுவுவதற்கு மட்டுமே டிரான்ஸ்யூனியன் சிஐபிஎல் லிமிடெட் நிறுவனமானது ஆதார் அங்கீகாரத்தை செய்யும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியது. மற்றும் இந்த அங்கீகார நோக்கத்திற்காக டிரான்ஸ்யூனியன் ஆதார் எண் வைத்திருப்பவரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று அமைச்சகம் கூறுகிறது.

ஒரு பயனர் டிரான்ஸ்யூனியனுக்கு ஆதார் அங்கீகாரத்தை மறுக்க முடியுமா? கண்டிப்பாக மறுக்க முடியும். நீங்கள் ஆதார் அங்கீகாரத்தை மறுக்கலாம் மற்றும் பிற விருப்பங்களை தேர்வுசெய்யலாம். ஆதார் அங்கீகாரத்தை மறுத்ததற்காக அல்லது செய்ய முடியாததற்காக டிரான்ஸ்யூனியன் ஆதார் எண் வைத்திருப்பவருக்கு எந்த சேவையையும் மறுக்கக்கூடாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது:

ஆதார் அங்கீகாரம் தன்னார்வ அடிப்படையில் இருக்கும் என்றும், டிரான்ஸ்யூனியன் ஆதார் எண்ணை வைத்து இருந்தாலும், அவர்களுக்கு ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை செய்ய விருப்பம் இல்லை என்றால்.. பின்வரும் மாற்று ஆவணங்கள் மற்றும் சாத்தியமான அடையாள வழிமுறைகளை தெரிவிக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது:

நிரந்தர கணக்கு எண் கார்டு (Permanent Account Number Card - PAN Card), பாஸ்போர்ட் (Passport), இந்திய தேர்தல் ஆணையத்தால் (Election Commission of India) வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை (Voter's identity card), மோட்டார் வாகன சட்டம், 1988 (1988 இன் 59) இன் கீழ் உரிமம் வழங்கும் ஆணையத்தால் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் (Driving License) அல்லது ரேஷன் கார்டு (Ration Card).

சிபில்-இல் ஏன் ஆதார் அங்கீகாரம்? பதிவு மற்றும் உள்நுழைவு நோக்கங்களுக்காக ஆதார் அங்கீகாரம் பயன்படுத்தப்பட்டால், அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களின் தேவையை இது நீக்குகிறது, நடைமுறைகளை நெறிப்படுத்துகிறது, மேலும் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது. இது மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளை மக்கள் எளிதாகவும் தடையற்றதாகவும் பெறுவதை சாத்தியமாக்குகிறது.

டிரான்ஸ்யூனியன் சிபில் என்றால் என்ன? டிரான்ஸ்யூனியன் என்பது ஒரு கடன் தகவல் (credit information) மற்றும் நுண்ணறிவு நிறுவனம் ஆகும். இது நிதித்துறை மற்றும் எம்எஸ்எம்இ-கள் (MSME), பெருநிறுவன மற்றும் தனிப்பட்ட நுகர்வோருக்கு சேவை செய்கிறது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் - வங்கிகள், நிதி நிறுவனங்கள், எம்பிஎப்சி-க்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அடங்கும்.


Article Corrections

Small Change in Title

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian Govt Approved TransUnion CIBIL Aadhaar Authentication in Registration Login on CIBIL platform
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X