வெளுத்து கட்டுது விற்பனை.. ரூ.4000 ஆஃபரில் 7600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 7600mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டுடன் அறிமுகமான ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.52,999ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.40,999 ஆரம்ப விலைக்கு இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினாலும், ரூ.4,000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ரூ.42,650 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெற்று கொள்ளலாம். டிரையம்ப் சில்வர் (Triumph Silver) மற்றும் டார்க் நைட் (Dark Knight) ஆகிய கலர்களில் இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். இப்போது, சிப்செட், கேமரா, டிஸ்பிளே மற்றும் போட்டரி பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த ஐக்யூ15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கொடுக்கப்பட்டு உள்ளது.
மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் (Android OS Updates) மற்றும் 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கொடுக்கப்பட்டு உள்ளன. 6500எம்எம் ஐஸ்கோர் விசி கூலிங் (IceCore VC Cooling) மற்றும் டூயல் லேயர் கிராபைட் ஷீட் (Dual Layer Graphite Sheet) கொடுக்கப்பட்டு உள்ளது. ஸ்காட் ஷீல்டு கிளாஸ் புரொடெக்சன் உள்ளது.
6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ். 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு உள்ளது. டிசி டிம்மிங் (DC Dimming) கொண்ட மாடலாகவும் இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 700வி (Sony LYT 700V) சென்சாரும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜியும் கிடைத்துள்ளது. 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 4K ரெக்கார்டிங் உள்ளது.
100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7600mAh பேட்டரி மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Chargig) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் இருக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே 3டி அல்ட்ரா சோனில் ஃபிங்கர்பிரிண்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








