Motorola-வின் மிரட்டலடி.. 9.9மிமீ ஸ்லிம் டிசைனில் 6000mAh பேட்டரி, 5 கேமரா, 16GB ரேம்.. புது Fold போன்!
சாம்சங் (Samsung) நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமின்றி, சந்தையிலுள்ள ஒட்டுமொத்த போல்டபிள் போன்களுக்கும் "டஃப்" கொடுக்கும்படியான அம்சங்களுடன் மோட்டோரோலா ரேசர் போல்ட் (Motorola Razr Fold) ஸ்மார்ட்போன் - எம்டபுள்யூசி 2026 (MWC 2026) நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
மோட்டோரோலா ரேசர் போல்ட் ஆனது மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் புக் ஸ்டைல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகும். ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? இதோ விவரங்கள்:

மோட்டோரோலா ரேசர் ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை: மோட்டோரோலா ரேசர் போல்டு ஸ்மார்ட்போன் ஆனது வரும் மாதங்களில் லத்தீன் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வாங்க கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில், மோட்டோரோலா ரேசர் போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது மோட்டோ பென் அல்ட்ரா உடன் இணைந்து EUR 1,999 க்கு (அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி தோராயமாக ரூ.2,14,200 க்கு) வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பான்டோன் பிளாக்னெட் ப்ளூ மற்றும் பான்டோன் லில்லி ஒயிட் ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும்.
மோட்டோரோலா ரேஸர் போல்ட் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (பிசிக்கல் சிம் + இசிம்) ஆதரவு உடன் வரும் மோட்டோரோலா ரேஸர் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான மை யுஎக்ஸ் (My UX) கொண்டு இயங்குகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.6-இன்ச் (1080 x 2520 பிக்சல்ஸ்) LTPO pOLED கவர் டிஸ்பிளேவை 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் கொண்டுள்ளது. டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 3 பினிஷ் உள்ளது.
இன்னர் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 2கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 6,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் அல்ட்ரா தின் கிளாஸ் (UTG) பாதுகாப்புடன் 8.1-இன்ச் இன்னர் LTPO pOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அட்ரினோ A829 ஜிபியு, 16GB வரை LPDDR5X ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்டு இயங்குகிறது.
கூடுதலாக ரேம் பூஸ்ட் அம்சத்தின் கீழ் இந்த ஸ்மார்ட்போனில் 16GB வரையிலான விர்ச்சுவல் மெமரியையும் ஆட் செய்யலாம். மோட்டோரோலா நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுக்கு 7 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 7 ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை மோட்டோரோலா ரேஸர் போல்ட் ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் 1/1.28-இன்ச் சோனி லைட்டியா ப்ரைமரி சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது
மேலும் இது கவர் ஸ்க்ரீனில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமராவையும், இன்னர் டிஸ்பிளேவில் 20-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரையும் கொண்டுள்ளது. இந்த கேமரா யூனிட்கள் 30fps இல் 8K வரை வீடியோ பதிவையும், 60fps இல் 4K வரை வீடியோ பதிவையும் ஆதரிக்கின்றன. IP49 ரேட்டிங் உடன் வரும் இத ஸ்மார்ட்போனில் 80W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,000mAh பேட்டரி உள்ளது
கடைசியாக, அளவீடுகளை பொறுத்தவரை மோட்டோரோலா ரேசர் போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது திறந்த நிலையில் 4.6மிமீ ஸ்லிம் ஆகவும், மூடும்போது 9.9மிமீ ஸ்லிம் ஆகவும் இருக்கும். மேலும் மூடப்படும்போது 160.05x73.6x10.04மிமீ அளவிலும் மற்றும் திறந்த நிலையில் 144.47x160.05x4.7மிமீ அளவிலும் இருக்கும். இதன் எடை 243 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications








