Home
Mobile

அறிமுகமானது புதிய Redmi ஸ்மார்ட்போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 8ஜிபி ரேம்.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி (Redmi A7 Pro 4G) ஸ்மார்ட்போனை தற்போது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி அம்சங்கள் (Redmi A7 Pro specifications): 6.9-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் புதிய ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அறிமுகமானது புதிய Redmi ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்? என்ன விலை?

சக்திவாய்ந்த யுனிசாக் டி7250 (Unisoc T7250) பிராசஸர் உடன் புதிய ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் புதிய ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.

13எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்புடன் புதிய ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் உடன் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இல்லை. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது.

4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி போனில் உள்ளன. மேலும் பிளாக், ஆரஞ்சு, ப்ளூ, கிரீன் நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் விலை Rp 1,699,000 (இந்திய மதிப்பில் ரூ.9,208). அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ரெட்மி போன் கம்மி விலையில் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

photo credits: XiaomiIndonesia, gizmochina

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi A7 Pro launched in Indonesia: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X