பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!

|

பிரபஞ்சம் எப்படி உருவானது, அதன் ஆரம்பம் என்ன, விண்வெளியில் இருக்கும் கோள்கள், அங்கு நடக்கும் நிகழ்வுகள் ஆகியவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனிதனுக்கு எப்போதுமே இருந்து வருகிறது.

விண்வெளி தொடர்பான எந்த ஒரு செய்தியுமே வெளிவரும் பொழுது மக்கள் அதனை மிகுந்த ஆர்வத்துடன் கவனிப்பது வழக்கம். உலக நாடுகளில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களும் பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய ரகசியத்தைக் கண்டறியவும், விண்வெளியில் இருக்கும் பல மர்மமான நிகழ்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து - பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் பிரபஞ்சத்தின் பல மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படாமலே இருக்கின்றன.

பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.!

பூமியில் செயற்கை சூரியன் போல செயற்கை பிளாக் ஹோல்-ஆ.!

இவற்றைக் கண்டறிய விண்வெளிக்கு நேராகச் செல்ல முடியாது என்பதனால், இன்றைய அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்தி விண்வெளியின் பல மாதிரிகள் ஆராய்ச்சி கூடங்களில் உருவாக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் குறித்துக் கண்காணிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பித்துள்ளனர். உதாரணமாகச் செவ்வாய் போன்ற அமைப்பில், ரோவர்களை சோதனை செய்வது. செயற்கையான சூரியனை உருவாக்குவது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில், அடுத்து ஒரு நம்ப முடியாத படைப்பை ஆராய்ச்சியாளர்கள் பூமியில் உருவாக்கியுள்ளனர். எத்தனை அறிவியல் மேம்பாடுகள் வந்தாலும், இன்று வரை விண்வெளியில் இருக்கும் பிளாக் ஹோல் (Black Hole) பற்றி அறிந்து கொள்வது மிகவும் கடினமான டாஸ்க் (Task) ஆகவே இருந்து வருகிறது. பிளாக் ஹோலில் ஈர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்பதனால், அதனைக் கடக்கும் ஒளிகூட அதனுள் ஈர்த்துக் கொள்ளப்படும்.

பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.!

பிளாக் ஹோலின் மாதிரியை லேப் இல் உருவாக்கிய விஞ்ஞானிகள்.!

இதனால், பிளாக் ஹோலை ஆராய்ச்சி செய்ய முடியாமல் பல விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர். பிளாக் ஹோல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஒரு சாதனையாக சில விஞ்ஞானிகளைக் கொண்ட குழு, ஆராய்ச்சி கூடங்களிலேயே பிளாக் ஹோலின் மாதிரியை உருவாக்கியுள்ளது. ஆம், சரியாகத் தான் படித்தீர்கள். செயற்கையான பிளாக் ஹோலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது உருவாக்கியுள்ளனர்.

இதில் சிறப்பு என்னவென்றால், பிளாக் ஹோலை உருவாக்கியது மட்டுமின்றி, அதன் ஈவென்ட் ஹாரிஸனையும் (Event Horizon) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். விண்வெளியில் இருக்கும் பிளாக் ஹோலின் ஈவன்ட் ஹாரிஸானுடைய வெப்பத்திற்கு இணையான வெப்பம் இந்த செயற்கை ஈவன்ட் ஹாரிஸானிலும் உருவாக்கப்பட்டுள்ளது என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக ஒரு பிளாக் ஹோலை உருவாக்கி அதில் ஈவன்ட் ஹாரிஸான் தூண்டுதலை உறுதி செய்துள்ளனர்.

பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.!

அடேங்கப்பா.! 'இதையும்' விஞ்ஞானிகள் விட்டு வைக்கவில்லையா?

இந்த சாதனை குறித்த செய்தி ஆராய்ச்சியாளர்கள் வட்டம் மற்றும் இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது. இந்த ஆராய்ச்சி வெற்றிபெறும் பட்சத்தில் உண்மையான பிளாக் ஹோலிலிருந்து வெளியிடப்படும் ஹாக்கிங் ரேடியேஷன் (Hawking Radiation) பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ஹாக்கிங் ரேடியேஷன் என்பது ஒரு பிளாக் ஹோல் விண்வெளியில் சிதறும் பொழுது வெளியிடும் குவாண்டம் துகள்கள் ஆகும்.

மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த பிளாக் ஹோலின் ஈவன்ட் ஹாரிஸானை தூண்டுவதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டுள்ளனர். பொதுவாகவே ஒற்றை பரிமாணத்தில் (One dimensional) இருக்கும் அணுக்களின் சங்கிலி வழியாகப் பயணிக்கும் ஒரு எலக்ட்ரான் (electron) ஒரு அணுவிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிச் செல்லும். அந்த அணுக்களின் நெகிழ்வுத் தன்மையில் மாற்றம் செய்யும்பொழுது அவற்றின் சில தன்மைகளை மறைய வைக்க முடியும் என்பது அறிவியல் உண்மை.

பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.!

மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பிளாக் ஹோல்.!

மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த பிளாக் ஹோல் தியரி ஆஃப் ஜெனரல் ரிலேட்டிவிட்டி (Theory of General Relativity) மற்றும் தனித்தனி துகள்களின் செயல்பாடு குறித்த குவாண்டம் மெக்கானிக்ஸ் (Quantum Mechanics) ஆகிய இரண்டையும் பற்றித் தெரிந்து கொள்ள உதவிக்கரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலே கூறப்பட்ட இரண்டையும் மனிதனால் உருவாக்கப்பட்ட பிளாக் ஹோல் இணைக்கும் பட்சத்தில், இந்த ஆராய்ச்சி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளவும் உதவலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், இந்த ஆராய்ச்சி பிளாக் ஹோல்களையும் வார்ம் ஹோல்களையும் (Wormhole) பிரித்துப் பார்க்கவும் உதவிக்கரமாக இருக்குமாம். மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

Best Mobiles in India

English summary
Researchers Simulated An Artificial Black Hole In The Lab Glows Exactly Like The Real One

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X