Home
News

ஒவ்வொரு இந்தியரும் கூகுள் மேப்ஸில் இந்த புதிய வசதியை தெரிஞ்சுக்கணும்.. இனி சிரமம் இருக்காது.. ஏன்?

இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை (Aadhaar card) மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாகப் பயன்படுகிறது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் என அனைத்து சேவைகளைப் பெறுவதற்கு இந்த ஆதார் கட்டாயம் தேவைப்படுகிறது. அதுவும் ஆதார் இல்லாமல் அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியாது. இந்நிலையில் ஆதார் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களைக் கூகுள் மேப்ஸில் (Google Maps) காட்டும் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளன. குறிப்பாக UIDAI மற்றும் கூகுளின் ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆதார் சேர்க்கை மற்றும் திருத்த மையங்கள் (Aadhaar Enrolment & Update Centres) கூகுள் மேப்ஸில் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இந்தியரும் கூகுள் மேப்ஸில் இந்த புதிய வசதியை தெரிஞ்சுக்கணும்..

அதுவும் அரசு நடத்தும் ஆதார் சேவா கேந்திராக்கள் (ASKs) மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட மையங்களும் அடங்கும். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள உண்மையான மையங்களை சில நொடியில் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த சேவையில் வெறும் இடத்தை மட்டும் காட்டாமல், அந்த மையத்தில் என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

புதிய ஆதார் பதிவு, பயோமெட்ரிக் பதிவு, பெயர், முகவரி, செல்போன் எண், பிறந்த தேதி,பாலினம் ஆகியவற்றைத் திருத்துதல் மற்றும் மையத்தின் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்கள் போன்றவற்றைக் கூகுள் மேப்ஸில் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும். இதுதவிர பல சிறப்பான சேவைகள் கூகுள் மேப்ஸில் கிடைக்கும்.

அதன்படி ஆதார் மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த தகவல்களும் இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் (Divyang-friendly infrastructure), வாகன நிறுத்துமிடம் (Parking, மையத்தின் கூட்ட நெரிசல் குறித்த விவரங்களையும் பயனர்கள் முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

சில சமயம் கூகுள் மேப்ஸில் தேடும்போது அதிகாரப்பூர்வமற்ற மையங்கள் அல்லது தவறான முகவரிகள் காட்டப்படுவதுண்டு. ஆனால் இனி அந்த கவலை இருக்காது. அதாவது இந்த அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம், பயனர்கள் நேரடியாக UIDAI-ஆல் சரிபார்க்கப்பட்ட மையங்களுக்கு மட்டுமே வழிகாட்டப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய வசதி மக்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு, தவறான தகவல்களால் ஏமாறுவதையும் தவிர்க்கும்.

ஒவ்வொரு இந்தியரும் கூகுள் மேப்ஸில் இந்த புதிய வசதியை தெரிஞ்சுக்கணும்..

மேலும் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, கூகுள் பிசினஸ் புரொபைல் மூலம் மையங்களுக்கு நேரடியாகக் கருத்து தெரிவிக்கவும், அங்கேயே அப்பாயிண்ட்மெண்ட் (Appointment Booking) பதிவு செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. ஆனால் இந்த சேவைகள் வரும் மாதங்களில் தான் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் மையங்களில் பெயரளவு திருத்தங்களை மேற்கொள்ள ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கட்டணமின்றியும், 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.125 கட்டணத்திலும் பயோமெட்ரிக் புதுப்பிப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் மேப்ஸில் விரைவில் பல புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
UIDAI Collaborates with Google to Display Authorised Aadhaar Centres on Maps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X