திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

|

அமெரிக்க விண்வெளி ஆராச்சி மையமான நாசாவை (NASA) சேர்ந்த விஞ்ஞானிகள் - நீண்ட காலமாக பீதியை கிளப்பிவரும் - பூமி கிரகம் தொடர்பான ஒரு முக்கியமான விண்வெளி மர்மத்திற்கான (Space Mystery) விடையை கண்டுபிடித்துள்ளனர்.

அதென்ன மர்மம்? அந்த மர்மத்திற்கும் பூமியின் கடைசி நாளிற்கும் என்ன சம்பந்தம்? இதோ விவரங்கள்:

திக் திக் நிமிடங்கள்!

திக் திக் நிமிடங்கள்!

இன்றோ, நாளையோ இல்லை என்றாலும் கூட என்றாவது ஒரு நாள், நம் பூமி கிரகத்தின் மீது சந்திர கிரகம் வந்து மோதும்; அதுவே பூமியின் கடைசி "திக் திக்" நிமிடங்களாக இருக்கும் என்கிற கோட்பாடு ஆனது, இன்றுவரையிலாக நம்பப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

ஏனென்றால் பூமிக்கும், செவ்வாய் கிரகத்தின் அளவுள்ள மற்றொரு சிறிய கிரகத்திற்கும் இடையே நடந்த மோதலின் விளைவாகவே - சந்திரன் உருவானது என்கிற கோட்பாடு இன்றும் முன்மொழியப்படுகிறது. அந்த கோட்பாடு, ஜெயின்ட்-இம்பாக்ட் தியரி (Giant-impact theory) என்று அழைக்கப்படுகிறது.

பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!

ஆக.. சந்திர கிரகம் மோதி தான் நம் பூமி அழியுமா?

ஆக.. சந்திர கிரகம் மோதி தான் நம் பூமி அழியுமா?

பூமியும், சந்திரனும் மோதுமா? உண்மையில் அப்படி ஒரு விண்வெளி நிகழ்வு நடக்குமா? அதுதான் பூமியின் கடைசி நாளாக இருக்குமா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை அம்பலப்படுத்தும் நோக்கத்தின் கீழ் நாசா விஞ்ஞானிகள் - இதுதொடர்பான உண்மை ஒன்றை அம்பலப்படுத்தி உள்ளனர்!

நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, நமது சூரிய குடும்பமானது (Solar System), சோலார் பாடீஸ்களுக்கு (Solar Bodies) இடையே, அதாவது கிரங்கங்கள் மற்றும் நிலவுகளுக்கு இடையே சமநிலையை பராமரிக்கிறது.

அந்த சமநிலையானது - சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களும் (Planets) மற்றும் அவற்றின் நிலவுகளும் (Moons) ஒன்றுடன் ஒன்று மோதுவதை தடுக்கிறது!

இருந்தாலும் கூட?

இருந்தாலும் கூட?

சூரிய குடும்பத்தில் உள்ள சமநிலையின் காரணமாகவும்.. பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள கிராவிடேஷனல் கனெக்ஷன் (Gravitational connection) காரணமாகவும், அவைகள் ஒன்றோடொன்று மோதுவது நடைமுறையில் சாத்தியமற்றது என்று கூறப்படுகிறது.

இருந்தாலும் கூட, இதுதான் நடக்கும், இப்படித்தான் நடக்கும் என்று எதையுமே 100% உறுதியாக கூறிவிட முடியாது. ஏனென்றால், மற்றொரு அறிவியல் கோட்பாடானது - பூமியும், சந்திரனும் மோதுவதற்கான வாய்ப்புகளை பற்றி விவரிக்கிறது.

தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

அதென்ன வாய்ப்புகள்?

அதென்ன வாய்ப்புகள்?

பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள கிராவிடேஷனல் கனெக்ஷனில் குறுக்கீடு ஏற்பட்டால் அல்லது மாற்றம் ஏற்பட்டால் அவைகள் (பூமியும், சந்திரனும்) ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகலாம்.

இது சாத்தியமா என்று கேட்டால்.. ஆம், சாத்தியம் தான்! ஒரு மிகப்பெரிய சிறுகோள் அல்லது விண்கல் ஆனது பூமி மற்றும் சந்திர அமைப்புக்கு (Earth / Moon system) அருகில் வந்தால், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள கிராவிடேஷனல் கனெக்ஷன் ஆனது சீர்குலையலாம்; அது ஒரு மோதலுக்கு வழிவகுக்கலாம்.

பூமியும் நிலவும் மோதினால் என்ன ஆகும்?

பூமியும் நிலவும் மோதினால் என்ன ஆகும்?

ஒருவேளை சந்திர கிரகமானது நாம் வாழும் பூமி கிரகத்தின் மீது வந்து விழுந்தால் அல்லது மோதினால் என்ன நடக்கும்? என்கிற கேள்விக்கு ஒரே ஒரு பதில் தான் உள்ளது. அது என்னவென்றால் - பூமி அழிந்து விடும்.

இன்னும் சொல்லப்போனால் பூமி மட்டும் அல்ல, பூமி மீது மோதியதன் விளைவாக சந்திரனும் அழிந்து போகும்.

விண்வெளியை பொறுத்தவரை "அழிவு" என்றால் - கிரகங்கள் அல்லது நட்சத்திரங்கள் அல்லது விண்கற்கள் ஆனது பல சிறிய துண்டுகளாக உடைந்து, பிரிந்து போகும் என்று அர்த்தம் ஆகும்!

Photo Courtesy: NASA

Best Mobiles in India

English summary
NASA Scientists Revealed The Mystery Behind Earth and Moon Collision Theory Here is the Truth

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X