கண்டுபிடிப்பு : கம்போடிய காட்டில்மறைந்து கிடந்த இடைக்கால நகரங்கள்..!

Written By:

சில கண்டுபிடிப்புகளின் மூலம் அதிநவீன தொழில்நுட்பம் ஆனது எப்படி சக்தி வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டதுஎன்று நம்மையெல்லாம் வியக்க வைக்கிறது, மறுபக்கம் அதன் மூலம் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் இதுவரை நாம் நம்பி வந்த உண்மைகளை - சில சமயம் சற்று உரசிப் பார்க்கவும், பல சமயம் - உடைத்து பார்க்கவும் செய்கிறது..!

அப்படியான ஒரு கண்டுபிடிப்பு தான் இந்த கம்போடிய காட்டின் மத்திய காலத்திற்குரிய நகரங்கள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நகரங்கள் :

நகரங்கள் :

ஒரு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் இருந்து, வான்வழி லேசர் ஸ்கேனர்கள் மூலம் கம்போடியா பகுதிக்காடுகளில் மறைந்து கிடந்த அறியப்படாத நகரங்கள் வெளிப்படுத்தபட்டுள்ளன..!

ஆசிய வரலாறு :

ஆசிய வரலாறு :

இந்த கண்டுபிடிப்பானது தென்கிழக்கு ஆசிய வரலாறு தொடர்பாக நமது சிந்தனை மாற்றி அமைக்க கூடிய வண்ணம் உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

900 - 1400 ஆண்டுகள் :

900 - 1400 ஆண்டுகள் :

இந்த குடியேற்றங்கள் கம்போடிய நாட்டின் வடமேற்கில் உள்ள அங்கோர் வாட் பண்டைய கோயில் நகரம் அருகில் அமைந்துள்ளது. இவைகள் சுமார் 900 - 1400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் மதிப்படப்பட்டுள்ளது.

புனோம் பென் :

புனோம் பென் :

இங்குள்ள சில நகரங்கள் ஆனது கம்போடிய தலைநகரான புனோம் பெனை விட அளவில் பெரியதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லிடார் தொழில்நுட்பம் :

லிடார் தொழில்நுட்பம் :

நிலப்பரப்பின் மேல் உள்ள தாவர பகுதிகளை வடிகட்டி, மேற்பரப்பில் மறைக்கப்பட்ட விவரங்களை வெளியிட உதவும் லிடார் (LiDAR) தொழில்நுட்பம் மூலம் இந்த இயற்கை ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

விவரங்கள் :

விவரங்கள் :

தரை பகுதியில் இருந்துகொண்டு காண்பதற்கும் ஆராய்வதறகும் மிகவும் கடினம் என்பதால் இம்முறையில் சின்ஹா நகரங்களின் விவரங்கள் மற்றும் பண்டைய நாகரிக வடிவங்கள், உள்கட்டமைப்பு தளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

டேமியன் இவான்ஸ் :

டேமியன் இவான்ஸ் :

எங்கு இருக்கிறது என்றே இதுவரை புலப்படாத யாரும் அறிந்திடாத முழு நகரங்களையும் நாங்கள் கண்டுபிடித்துளோம் என்று கூறியுள்ளார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டேமியன் இவான்ஸ்.

ரோமன் சாலைகள் :

ரோமன் சாலைகள் :

இதற்கு முன்னதாக இதே ஆண்டில் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரிட்டனில் உள்ள ரோமன் சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

விரைவில் நிரூக்குள் மூழ்க போகும் உலகின் 7 அதிசயங்கள்..!


பண்டையை பூமிக்கு 'நேர்ந்த' எதிர்பாராத மாற்றங்கள், எதனால் என்று தெரியுமா..?!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Laser technology reveals huge medieval cities hidden in the Cambodian jungle. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot