அடிச்சான் பாரு! ISRO-வுடன் கூட்டு சேர்ந்த பில் கேட்ஸ்.. இனிமே இந்தியாவின் ஆட்டம் வேற மாதிரி இருக்கும்!

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான இஸ்ரோவும் (ISRO), பில் கேட்ஸ் இணை நிறுவிய மைக்ரோசாப்ட் (Microsof) நிறுவனமும் - ஒரு நல்ல காரியத்திற்காக கூட்டு சேர்ந்துள்ளன.

அதென்ன காரியம்? இஸ்ரோவும், மைக்ரோசாப்ட்டும் கூட்டு சேர்ந்து அப்படி என்ன செய்ய போகின்றன? இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம்? இதோ விவரங்கள்:

எதற்காக இந்த கூட்டணி?

எதற்காக இந்த கூட்டணி?

இந்தியாவில், விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களின் (Space Technology Start-ups) வளர்ச்சியை தூண்டும் வகையில், இஸ்ரோவும், மைக்ரோசாப்ட்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandum of Understanding) ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரோ-மைக்ரோசாப்ட் கூட்டணியானது, இந்தியா முழுவதும் உள்ள விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் தளங்கள், சந்தைப்படுத்துவதற்கான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் போன்றவைகளை வழங்கும்.

திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!திக் திக் நிமிடங்கள்! அது தான் பூமியின் கடைசி நாளாக இருக்கும்? நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானிகள்!

உதவி செய்வது மட்டுமல்ல!

உதவி செய்வது மட்டுமல்ல!

விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை வளர்த்துவிடுவது மட்டுமின்றி, இஸ்ரோவால் அடையாளம் காணப்படும் திறமையான விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள் ஆனது, மைக்ரோசாப்ட் ஃபார் ஸ்டார்ட்அப்ஸ் பவுண்டர்ஸ் ஹப் பிளாட்ஃபார்ம் (Microsoft for Startups Founders Hub platform) உடன் இணைக்கப்படும்.

அதன் பின்னர் குறிப்பிட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளும் இலவசமாக கிடைப்பதை மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி செய்யும்!

இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம்?

இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம்?

இந்த கூட்டணி பற்றி இஸ்ரோவின் தலைவர் ஆன சோமநாத் பேசுகையில், "மைக்ரோசாப்ட் உடனான இஸ்ரோவின் இந்த ஒத்துழைப்பு, விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஏஐ (AI - Artificial intelligence), மெஷின் லேர்னிங் (Machine Learning ) மற்றும் டீப் லேர்னிங் (Deep Learning) போன்ற அதிநவீன முறைகளை பயன்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்"

"மேலும் அவர்களுக்கு, பல்வேறு வகையான பயன்பாடுகளுக்காக சேகரிக்கப்படும் பரந்த அளவிலான செயற்கைக்கோள் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். இது அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்திற்கும் பெரிய அளவில் பயனளிக்கும்" என்று கூறி உள்ளார்.

NASA-வின் கண்களில் மீண்டும் சிக்கிய NASA-வின் கண்களில் மீண்டும் சிக்கிய "கோஸ்ட்".. விஞ்ஞானிகளை குழப்பும் 71 ஆண்டுகால மர்மம்!

இஸ்ரோவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி!

இஸ்ரோவுடன் வேலை செய்வதில் மகிழ்ச்சி!

இந்த கூட்டணி பற்றி மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் ஆன அனந்த் மகேஸ்வரி பேசுகையில், "இந்தியாவில் உள்ள விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களானது, தொழில்நுட்பத்தின் சக்தியுடன் நாட்டின் விண்வெளி திறன்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன"

"அப்படியான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக இஸ்ரோவுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய தொழில்நுட்ப கருவிகள், தளங்கள் மற்றும் வழிகாட்டல்களானது அதிநவீன கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும், அறிவியல் கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும் உதவும் என்று நம்புகிறோம்" என்று கூறி உள்ளார்.

இஸ்ரோவிற்கும் நாசாவிற்கும் இடையே ஏதேனும் கூட்டணி இருக்கிறதா?

இஸ்ரோவிற்கும் நாசாவிற்கும் இடையே ஏதேனும் கூட்டணி இருக்கிறதா?

ஆம், இருக்கிறது! கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியன்று, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் (NASA) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும், என்ஐஎஸ்ஏஆர் (NISAR) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன,

நிசார் (NISAR) என்பது நாசா-இஸ்ரோ சிந்தெடிக் அப்பர்செர் ரேடார் மிஷன் (NASA-ISRO Synthetic Aperture Radar Mission) என்பதின் சுருக்கம் ஆகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு புவி கண்காணிப்பு செயற்கைகோளில் டூயல்-ப்ரெக்வென்சி சிந்தெடிக் ரேடார் பொருத்தப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படும். அதுவே டூயல்-ப்ரெக்வென்சிகளை பயன்படுத்தும் முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் ஆக இருக்கும். இந்த மிஷன் 2024 ஆம் ஆண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.

PhotoCourtesy: ISRO, Microsoft, NASA

Best Mobiles in India

English summary
ISRO And Microsoft Teamed Up To Support Space Tech Start up Companies in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X