ரூ.1000 கீழ் பேலன்ஸ்.. பேங்க் அக்கவுண்ட்டில் EPFO வைத்து இருப்பவர்களுக்கு புது ரூல்ஸ்.. இனி பணம் என்னாகும்?
பேங்க் அக்கவுண்ட்டில் இபிஎப் (EPF) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அக்கவுண்ட்டை (Employees Provident Fund Account) இணைத்து வைத்து இருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.1,000 பேலன்ஸ் அல்லது அதற்கு குறைவாக பேலன்ஸ் வைத்து இருந்தால் இது பொருந்தும்.
மாத சம்பளம வாங்கும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அக்கவுண்ட் ஓப்பன் செய்யப்படுகிறது. இதில் மாதாந்திரம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இதை தேவைப்படும்போது எடுத்து கொள்ளலாம். இல்லையென்றால், ஓய்வு பெறும் வரையில் சேமித்து பெற்று கொள்ளலாம். இந்த இபிஎப்ஓவில் புதிய விதிகள் வந்துள்ளன.

1. ரூ.1,000 அல்லது குறைவான பேலன்ஸ்: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது ரூ.1,000 அல்லது அதற்கு குறைவான பேலன்ஸ் கொண்ட அக்கவுண்ட்களில் ஆட்டோ-கிரெடிட் விதிகளை கொண்டு வந்துள்ளது. இது கிளைம் செய்யப்படாத அக்கவுண்ட்களுக்கு பொருந்தும். அதாவது, செயல்படாத அக்கவுண்ட்களுக்கு வருகிறது.
ஆகவே, ரூ.1,000 அல்லது அதற்கு குறைவான பேலன்ஸ் இருக்கும் அக்கவுண்ட்கள் செயல்படாமல் இருந்தால், அந்த தொகை ஆட்டோ-கிரெடிட் செய்யப்படும். அதாவது, இபிஎப் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டுக்கு தொகை அனுப்பி வைக்கப்பட்டுவிடும். ஆனால், இதில் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இபிஎப் அக்கவுண்ட் ஓப்பன் செய்யப்படும்போதே ஆதார் விவரங்கள் மற்றும் அதனுடனை இணைக்கப்பட்ட பேங்க் விவரங்கள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த விவரங்களின்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டுக்கு மட்டுமே அந்த தொகை அனுப்பி வைக்கப்படும். கிளைம் செய்தாலும் இதே அக்கவுண்டுக்கு மட்டுமே பணம் வழங்கப்படும்.
2. செயல்படாத இபிஎப் அக்கவுண்ட்கள்: இபிஎப் அக்கவுண்ட் ஓப்பன் செய்யப்பட்ட பிறகு மாதாந்திரம் அதில் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இது வேறு நிறுவனத்துக்கு ஊழியர்கள் மாறினாலும் பொருந்தும். பழைய அக்கவுண்ட்டை புதிய அக்கவுண்ட்டுடன் இணைத்து கொள்ளலாம். இது வழக்கமாக நடக்கும் செயல்முறையாகும்.
இப்படி நடக்காமல், எந்த தொகையும் வரவு வைக்கப்படாமல் இருந்தால், அது செயல்படாத இபிஎப் அக்கவுண்ட்களாக எடுத்து கொள்ளப்படும். இதுவும் 3 வருடங்களுக்கு காலக்கெடுவை கொடுக்கும். அதாவது, 36 மாதங்களாக எந்த தொகையும் வரவு வைக்கப்படாமல் இருந்தால், அதில் இருக்கும் ரூ.1,000 அல்லது குறைவான பேலன்ஸ் சம்பந்தப்பட்ட பேங்க் அக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும்.
மேலும், 55 வயதை அடைந்த பிறகும் இந்த ஆட்டோ-கிரெடிட் விதிகள் பொருந்தும். கிளைம் செய்யப்படாமல் இருக்கும் தொகை பேங்க் அக்கவுண்ட்டுக்கு மாற்றப்படும். இது அதிக தொகை கொண்ட இபிஎப் அக்கவுண்ட்களுக்கு பொருந்தாது. ஏனென்றால், பெரிய தொகையை பெற கிளைம் செய்து மட்டுமே பெற முடியும். ஆட்டோ-கிரெடிட் பொருந்தாது.
ஆகவே, இபிஎப் அக்கவுண்ட்டை லாகின் செய்து, கிளைம் செய்து கொள்ள வேண்டும். இதற்கும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட் இருக்க வேண்டும். முழு தொகையை எடுக்க வேண்டுமானால், பழைய இபிஎப் அக்கவுண்ட்டை புதிய இபிஎப் அக்கவுண்ட்டுடன் இணைக்க வேண்டும். பிறகு சரியான படிவத்தை சமர்பிக்க வேண்டும்.
மேலும், புதிதாக வர இருக்கும் இபிஎப்ஓ விதிகளின்படி 75 சதவீத தொகையை எடுத்து கொள்ளலாம். 25 சதவீத தொகையை அப்படியே பராமரித்து கொள்ளலாம். இந்த 75 சதவீத தொகையை பெறுவதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த விதிகள் அமலுக்குவர உள்ளன.


Click it and Unblock the Notifications








