ஏர்டெல்லுக்கு கும்பிடு.. மாதாந்திரம் ரூ.299 க்கு 365 நாட்கள்.. லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள்.. 2ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மாதாந்திரம் ரூ.299 செலவில் (Monthly Cost Rs 299) வருடம் முழுவதும் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரிக்கு டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. கூடுதலாக ஓடிடி சந்தா, அடோப் சந்தா உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த ஏர்டெல் வருடாந்திர திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஏர்டெல் நிறுவனத்தில் கிடைக்கும் ரூ.3,599 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு ரூ.299 செலவில் அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன. அதாவது, இதில் 12 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மாத செலவு ரூ.299ஆக இருக்கிறது. வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, மாத செலவை குறைக்க முடியும். ஒருவேளை மாதத்துக்கு ரீசார்ஜ் செய்தால், இவ்வளவு சலுகைகள் கிடைக்காது.

ஏர்டெல் ரூ. 3599 திட்ட விவரங்கள் (Airtel Rs 3599 Plan Details): வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை மட்டுமல்லாமல், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா (Adobe Express Premium) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவை கொடுத்து உள்ளது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஆகவே, 365 நாட்கள் முழுவதும் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். தினமும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டாவை 4ஜி கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறும் கஸ்டமர்களாக இருந்தால், 4ஜி டேட்டாவை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். வருடம் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம்.
2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளுடன் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதை 30 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி கொள்ளலாம். மேலும், ஸ்பேம் எஸ்எம்எஸ்கள் மற்றும் ஸ்பேம் கால்களை டிடெக்ட் செய்து கொள்ள லைவ் ஸ்பேம் அலெர்ட் சலுகைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த சலுகைகள் மட்டுமே வழக்கமாக கொடுக்கப்படுகின்றன. இதில் கூடுதலாக 2 சலுகைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. முதலாவது, சலுகையாக அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா இருக்கிறது. இந்த சந்தாவையும் 12 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஓடிடி பிரியர்களுக்காக ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், இது ப்ரீ கன்டென்ட்களை மட்டுமே கொடுக்கும்.
இதில் சோனிலிவ் ப்ரீ வெர்ஷன், அமேசான் எம்எக்ஸ் பிளேயர் உள்ளிட்ட ஆப்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகைகளையே ரூ.3,599 திட்டம் கொடுத்து உள்ளது. இதைவிட கூடுதல் டேட்டா சலுகை மற்றும் ஓடிடி ஆப்களுக்கு ஏர்டெல் ரூ. 3999 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 2.5 ஜிபி தினசரி டேட்டா சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.
இதிலும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் சந்தா 1 வருடத்துக்கு கொடுக்கப்படும். இதில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா கிடைக்காது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே கிடைக்கின்றன. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஸ்பேம் அலெர்ட் சலுகை மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








