மார்க்கெட் காலி.. OPPO ஒரே போடு.. 7000mAh பேட்டரி, 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் புது போன்!
ஒப்போ (OPPO) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல. கடந்த நவம்பரில் தான் இந்நிறுவனம் அதன் பிரீமியம் பிரிவின் கீழ், அதன் பைண்ட் எக்ஸ்9 சீரீஸின் கீழ் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஆகிய 2 மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது
பின்னர் பிப்ரவரி 2026 இல் அதன் பட்ஜெட் பிரிவின் கீழ் ஒப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது. இப்போது இதே கே14 சீரீஸின் கீழ் ஒப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற மார்ச் 9 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட வேகத்தில், ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீன சந்தைக்கு வெளியே, ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனமானது ஒரு அல்ட்ரா மாடலை அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும். இதுகுறித்த அறிவிப்பில் ஒப்போ நிறுவனமானது ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
இருப்பினும், ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சரியான உலகளாவிய வெளியீட்டு தேதி (Global Launch Date), அதன் சிப்செட், பேட்டரி திறன், கேமரா செட்டப், வடிவமைப்பு, கலர் ஆப்ஷன்கள் மற்றும் விலை நிர்ணய விவரங்கள் உள்ளிட்ட வேறு எந்த தகவல்களையும் ஒப்போ வெளியிடவில்லை.
ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சமீபத்தில் வெளியான "லீக்ஸ்" அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா இருக்கும் என்றும், அதில் 1/1.28-இன்ச் சென்சார் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது 50-மெகாபிக்சல் இரண்டாம் நிலை டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது என்றும், இது 10x ஆப்டிகல் ஜூம் திறன்களை வழங்குகிறது என்றும் கூறப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை இது 7,000mAh க்கும் அதிகமான திறன் கொண்ட பேட்டரியை பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இது 6100mAh பேட்டரியை கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். ஒப்போ பைண்ட் எக்ஸ்8 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்9 மற்றும் பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: பொதுவான அம்சங்களை பொறுத்தவரை இரண்டுமே மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட்டால் இயக்கப்படுகின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) உடன் வருகின்றன.
மேலும் இரண்டு போன்களிலும் ஹசல்பிளாட் (Hasselblad) ஆதரவு கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் 50 மெகாபிக்சல் சோனி LYT 828 ப்ரைமரி சென்சார்கள் உள்ளன. மேலும் இரண்டு மாடல்களுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP68 மற்றும் IP69 ரேட்டிங்களுடன் வருகின்றன.
முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ வேரியண்டின் கேமரா செட்டப்பில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் பேக் செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் வெண்ணிலா ஒப்போ பைண்ட் எக்ஸ்9 வேரியண்ட்டில் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.


Click it and Unblock the Notifications