ஊர் அலற, மார்க்கெட் தெறிக்க.. 9000mAh பேட்டரி உடன் புது POCO 5ஜி போன்.. அடிச்சு புடிச்சு வாங்க போகும் இந்தியா!
போக்கோ (POCO) நிறுவனம் அதன் மிகவும் பிரபலன எக்ஸ் சீரீஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. அது போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஆகும். இதன் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது வருகிற மார்ச் 26 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் போக்கோ நிறுவனம் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் எந்தெந்த சிப்செட்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

போக்கோ பிராண்ட் பகிர்ந்துள்ள ஒரு டீஸர், போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மீடியாடெக் (MediaTek) நிறுவனத்தின் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா ( Dimensity 8500 Ultra) மற்றும் டைமன்சிட்டி 9500எஸ் (Dimensity 9500s) சிப்களில் இயங்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
இருப்பினும் போக்கோ நிறுவனம் இன்னும் சரியான மாடல் பெயர்களை உறுதிப்படுத்தவில்லை. ஆகையால் எந்த மாடலில் எந்த சிப்செட் இடம்பெறும் என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.பெரும்பாலும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்பை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது டைமன்சிட்டி 9500எஸ் கொண்டு இயங்கலாம்.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த போக்கோ போன்கள் சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி மாடல்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ரெட்மி கார்போ 5 (Redmi Turbo 5) மற்றும் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Redmi Turbo 5 Max) ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்
அதன்படி போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலானது 9000mAh யூனிட்டை கொண்டிருக்கலாம்; சில முந்தைய அறிக்கைகள் இது 8,500mAh உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று பரிந்துரைப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
ஒருவேளை போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது உண்மையாகவே 9,000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டால், இதுவரை வெளியான போக்கோ ஸ்மார்ட்போன்களால் இல்லாத அளவிலான பெரிய பேட்டரி இதில் இருக்கும். இதோடு இவ்விரு மாடல்களுமே டிஸ்பிளே அளவிலும், செல்பீ கேமராவிலும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கலாம்
போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடலில் 6.59-இன்ச் OLED டிஸ்பிளே இடம்பெறலாம். அதே நேரத்தில் ப்ரோ மேக்ஸ் மாடலானது சற்றே பெரிய 6.83-இன்ச் பேனலுடன் வரலாம். இரண்டு டிஸ்பிளேக்களும் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ரியர் கேமராக்கள் ஒரே மாதிரியாக - 8MP அல்ட்ராவைடு லென்ஸுடன் இணைக்கப்பட்ட ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் 50MP ப்ரைமரி கேமரா இருக்கலாம்.
செல்பீ கேமராக்கள் வேறுபடலாம், ப்ரோ மாடலில் 20MP செல்பீ கேமரா இடம்பெறலாம், ப்ரோ மேக்ஸ் மாடலில் 32MP சென்சார் இடம்பெறலாம். இந்த சீரீஸ் 12GB வரை LPDDR5x ரேம் மற்றும் 512GB UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
VERDICT - போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்காக கொஞ்சம் நாள் காத்திருக்கலாமா? இதுவரை வெளியான மற்றும் லீக்ஸ் ஆனஅம்சங்கள் அடிப்படையில், போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் "ஹைப்" ஏற்றும்படியும், ஆர்வத்தை தூண்டும்படியும் தான் உள்ளன. ஆனால் இந்தியாவையும் விலை நிர்ணயம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்யும்.
நினைவூட்டும் வண்ணம், கடந்த 2025 ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (POCO X7 Pro 5G) ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.27,999 இல் தொடங்கியது. இதே போன்ற விலையை அல்லது இதைவிட கொஞ்சம் (ரூ.500 அல்லது ரூ.1000) அதிகமான விலையை எதிர்ப்பார்ப்பது - முட்டாள் தனம்!
வரவிருக்கும் புதிய போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் மாடல்களில் இடம்பெறும் சிப்செட்கள் - விலை ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம். அப்படியாக போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.30,000 - ரூ.33,000 க்குள் என்கிற வரம்பில் நிலைநிறுத்தப்படலாம். ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை இன்னும் அதிகமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications