Realme ருத்ர தாண்டவம்.. ரூ.12000 விலை குறைப்பு.. 5ஜி, 12GB ரேம், 120W சார்ஜிங், 5800எம்ஏஎச் பேட்டரி, IP69!
டூயல் 200 மெகாபிக்சல் ரியர் கேமராக்கள் உடன் "நெக்ஸ்ட் ஜெனரேஷன்" ரியல்மி ஜிடி 9 ப்ரோ (Realme GT 9 Pro) மாடல் ஆனது ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்க்கெட்டையும் ஒரு கலக்கு கலக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும், இது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கிய வேகத்தில் "சற்றே பழைய" ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை சர்ர்ரென குறைந்து அடி பாதாளத்திற்கு சென்று விட்டது.
பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் ரியல்மி ஜிடி 7 ப்ரோ (Realme GT 7 Pro) ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை ரூ.59,999 ஆகும். ஆக அமேசான் வலைத்தளம் ஆனது நேரடியாக ரூ.12000 விலை குறைத்துள்ளது. இதே மாடல் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.49,998 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி ஜிடி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- டால்பி விஷன்
- எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு
- 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம்
- 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்906 ப்ரைமரி சென்சார்
- 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 8 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா-வைட் கேமரா
- 16 மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5800எம்ஏஎச் பேட்டரி
- இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி69 ரேட்டிங்
- அளவீட்டில் 162.45 x 76.89 x 8.55 மிமீ
- எடையில் சுமார் 222 கிராம்
லேட்டஸ்ட் ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.79-இன்ச் QHD+ (1440 x 3136 பிக்சல்ஸ்) AMOLED பிளெக்சிபில் டிஸ்பிளே
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) Ricoh GR ஆன்டி-கிளேர் ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 120எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களை கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.6) டெலிஃபோட்டோ கேமரா
- 32 மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7000mAh பேட்டரி
- 120W மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ரியல்மி ஜிடி 8 ப்ரோ அறிமுக விலை மற்றும் இப்போதைய விலை: ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.78,999 க்கும் வெளியானது. கடைசியாக ஆஸ்டன் மார்ட்டின் ரேசிங் கிரீன் எடிஷனின் 16ஜிபி ரேம் + 512 ஜிபி ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்து. மார்ச் 2026 நிலவரப்படி பிளிப்கார்ட்ல் "அதே" விலைகளுக்கு தான் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








