புது Mini போன்.. முடிச்சு விட்டான் OnePlus.. முரட்டு 7500mAh பேட்டரி, LUMO டெலி கேமரா, 16GB ரேம்!
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் காம்பாக்ட் பிளாக்ஷிப் (Compact Flagship) ஸ்மார்ட்போன் ஆக.. அதாங்க ஒன்பிளஸின் முதல் மினி ஸ்மார்ட்போன் (Mini Smartphone) ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் அறிமுகத்திற்கு தயார் ஆக உள்ளது. அது ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடலாகும்.
இந்தியாவில் இது ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும்; அதாவது கடந்த ஆண்டு நடந்ததை போலவே. நினைவூட்டும் வண்ணம் சீனாவில் ஒன்பிளஸ் 13டி ஆக அறிமுகமான மாடல் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 13எஸ் ஆக அறிமுகம் ஆனது (ஒன்பிளஸ் 13எஸ் மாடல் பெயரில் உள்ள எஸ் என்பதற்கு 'ஸ்மால்' என்று அர்த்தம்).

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் வரவிருக்கும் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் இமேஜிங், டிசைன் மற்றும் பிற ஹார்ட்வேர் விவரங்கள் குறித்து சில குறிப்புகளை வழங்கியுள்ளார்.
ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் லி ஜீ லுயுஸ் (Li Jie Louis), ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு புதிய LUMO பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸுடன் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். லியின் கூற்றுப்படி, இந்த மேம்படுத்தப்பட்ட சென்சார் ஆனது மேம்படுத்தப்பட்ட நீண்ட தூர புகைப்படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெயிட் காட்சிகளை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது காம்பாக்ட் ஆக மட்டுமின்றி மெலிதான மற்றும் இலகுரக வடிவமைப்பையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் நான்கு பக்கங்களிலும் வெறும் 1.xx மிமீ அளவுள்ள மிகக்குறுகிய பெசல்கள் இருப்பதாக ஒன்பிளஸ் நிர்வாகி கூறுகிறார்.
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பேட்டரி திறனை அவர் வெளியிடவில்லை, ஆனால் சில வெய்போ பதிவுகள் - இதன் பேட்டரி "மற்ற ஸ்மால் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன்களை விட மிக நீண்ட காலம் நீடிக்கும்" என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அறிமுகத்தை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாத இறுதிக்குள் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டுடன் வர வாய்ப்புள்ளது. இந்த சிப்செட் 16GB வரையிலான ரேம் மற்றும் 1TB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். பேட்டரி கெப்பாசிட்டி சுமார் 7,500mAh ஆக இருக்கலாம். இது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடனும் வரலாம்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு- உடனான 5850mAh பேட்டரி


Click it and Unblock the Notifications