தட்டி தூக்கும் விலையில் Nothing Phone 4a Pro, Phone 4a இந்தியாவில் அறிமுகம்.. மார்ச் 13 முதல் விற்பனை!
நத்திங் (Nothing) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் ஆக நத்திங் போன் 4ஏ சீரீஸ் இந்தியாவிலும் பிற உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீரீஸின் கீழ் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) மற்றும் நத்திங் போன் 4ஏ ப்ரோ (Nothing Phone 4a Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
என்ன விலை? இந்தியாவில் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 8GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் ரூ.34,999 க்கும் மற்றும் ஹைஎண்ட் 12GB ரேம் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1,000 வங்கிச் சலுகையையும் கூடுதலாக ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB ஆப்ஷன் ரூ.39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ப்ரோ மாடலின் 8GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் ரூ.42,999 க்கும், ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.45,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவில் முறையே மார்ச் 13 மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. நத்திங் போன் 4ஏ மாடலானது பிளாக், ப்ளூ, பிங்க், ஒயிட் கலர்களிலும், ப்ரோ மாடலானது பிளாக், பிங்க், சில்வர் கலர்களிலும் வாங்க கிடைக்கும்.
நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- செமி டிரான்ஸ்பரென்ட் டிசைன்
- பேக் பேனலில் கிளிஃப் மேட்ரிக்ஸ் டிசைன் (விசித்திரமாக மேலே ஒரு சென்சார் மற்றும் கீழே மற்ற இரண்டு சென்சார்கள் உள்ளன)
- மெட்டல் பாடி
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 5000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.83-இன்ச் 1.5K பிளெக்சிபில் AMOLED டிஸ்பிளே
- Android 16 ஓஎஸ் அடிப்படையிலான Nothing OS 4.1
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP பெரிஸ்கோப் கேமரா
- 8MP அல்ட்ரா-வைட் கேமரா
- 32MP செல்பீ கேமரா
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5,400mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 ரேட்டிங்
நத்திங் போன் 4ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 30Hz முதல் 120Hz வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு
- 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.78-இன்ச் LTPS AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்
- LPDDR4X ரேம்
- UFS 3.1 ஸ்டோரேஜ்
- 5,400mAh பேட்டரி
- 50W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- IP64 ரேட்டிங்
- 2 ஹை டிபெனிஷன் மைக்குகள்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- இன்டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்மார்ட்போனின் இடது பக்கத்தில் எசன்ஷியல் கீ உள்ளது; இது Essential Voice எனப்படும் புதிய AI அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது.
- புதிய Glyph Bar உடன் வருகிறது; ஆறு LEDகள் மற்றும் 63 மினி-LEDகளை பேக் செய்கிறது


Click it and Unblock the Notifications