Home
How to

1 இல்ல 4 இலவச வசதிகள்.. PF அக்கவுண்ட் வைத்திருக்கும் எல்லோரும் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees' Provident Fund Organisation) அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருமே இபிஎப்ஓ-வின் கீழ் கிடைக்கும் ஒரு முக்கியமான இலவச வசதியை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது பிஎப் பேலன்ஸ் செக்கிங் (PF Balance Checking) குறித்த வசதி ஆகும்.

உங்கள் இபிஎப்ஓ அக்கவுண்ட்டில் உள்ள பேலன்ஸை சரிபார்ப்பது, உங்கள் வீட்டில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பணத்தை சரிபார்ப்பது போல மிகவும் எளிதான செயல்முறை என்று உங்களுக்கு தெரியுமா? இதற்காக நீங்கள் எந்த அலுவலகத்திற்கும் செல்லவோ அல்லது நீண்ட வரிசையில் நிற்கவோ தேவையில்லை.

PF அக்கவுண்ட் வைத்திருக்கும் எல்லோரும் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!

சில எளிய வழிமுறைகள் மூலம், உங்கள் வீட்டிலிருந்தே உங்கள் பிஎப் பேலன்ஸை சரிபார்க்கலாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் பிஎப் பேலன்ஸை சரிபார்க்க மொத்தம் 4 வழிகள் உள்ளன. உண்மையில் இந்த 4 வழிகளுமே மிகவும் எளிமையான செயல்முறைகளை கொண்டுள்ளது. இருப்பினும் மிஸ்டு கால் வசதி தான் இருப்பதிலேயே மிகவும் எளிது.

மிஸ்டு கால் கொடுப்பதன் வழியாக பிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி? உங்கள் இபிஎப் அக்கவுண்ட் பேலன்ஸை சரிபார்க்க, இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் இருந்து 9966-044425 என்கிற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள். நீங்கள் அதை செய்தவுடன், உங்கள் பிஎப் பேலன்ஸ் விவரங்களை உள்ளடக்கிய ஒரு எஸ்எம்எஸ்-ஐ பெறுவீர்கள்.

எஸ்எம்எஸ் அனுப்புவதன் வழியாக பிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி? உங்கள் இபிஎப் அக்கவுண்ட் பேலன்ஸை எஸ்எம்எஸ் மூலம் சரிபார்க்க, EPFO என்று டைப் செய்து, பின்னர் உங்கள் UAN நம்பரை டைப் செய்து, கூடவே LAN என டைப் செய்து 7738299899 என்கிற எண்ணுக்கு எஸ்எம்எஸ் ஆக அனுப்பவும். உங்களுடைய பிஎப் பேலன்ஸ் விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

மொபைல் ஆப் வழியாக பிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி? ஒருவேளை உங்கள் பாஸ்புக் மற்றும் இருப்புத்தொகையின் விரிவான சம்மரியை நீங்கள் [பார்க்க விரும்பினால், உங்கள் ஸ்மார்ட்போனில் உமாங் ஆப்பை (UMANG App) பதிவிறக்கம் செய்யலாம். அதில் இபிஎப்ஓ என்பதை தேடி, பின்னர் வியூ பாஸ்புக் (View Passbook) என்பதைக் கிளிக் செய்து, ஒடிபி (OTP) விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் எஸ்எம்எஸ் மூலம் ஒடிபி-ஐ பெற்ற பிறகு, அதை உள்ளிட்டு சப்மிட் என்பதை கிளிக் செய்யவும். பின்னர், விவரங்களை சரிபார்க்க மெம்பர் பாஸ்புக்கைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பாஸ்புக்கையும் பதிவிறக்கமும் செய்யலாம்.

இபிஎப்ஓ வலைத்தளம் வழியாக பிஎப் பேலன்ஸை தெரிந்துகொள்வது எப்படி? நீங்கள் இதை ஆன்லைனிலும் சரிபார்க்கலாம். இபிஎப்ஓ ​​வலைத்தளத்திற்கு (epfo.gov.in) சென்று இபிஎப்ஓ ​​சேவைகளை காட்டும் பகுதிக்கு கீழேஸ்க்ரோல் செய்து இபிஎப்ஓ அண்ட் யு (EPFO and You) என்பதை கிளிக் செய்யவும். பின்னர் பார் எம்பிளாயிஸ் (For Employees) என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்த பக்கத்தில் மெம்பர் பாஸ்புக் (Member Passbook) என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கே உங்கள் யுஏஎன் (UAN) எண், பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா கோட்-ஐ பயன்படுத்தி லாக்இன் செய்ய வேண்டும். நீங்கள் உள்நுழைந்ததும், உங்கள் பிஎப் கணக்கில் பாஸ்புக் சம்மரி சுருக்கம் மற்றும் மெம்பர் ஐடி வாரியான பேலன்ஸை காண்பீர்கள். மேலே உள்ள பாஸ்புக் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

அடுத்த ஸ்க்ரீனில், உங்கள் உறுப்பினர் ஐடியை தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் ஆண்டு வாரியான பாஸ்புக் சம்மரியை நீங்கள் பார்க்க முடியும். அங்கிருந்து உங்கள் பாஸ்புக்கையும் பதிவிறக்கம் செய்யலாம். இப்படியாக நான்கு செயல்முறைகள் வழியாக உங்கள் பிஎப் பேலன்ஸை எளிதாக சரிபார்க்கலாம், பாஸ்புக் விவரங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
PF Balance Check Via Missed Call SMS Number UMANG App EPFO Website Explained
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X