முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

|

வேற்று கிரகங்கள் பற்றி இதுவரை வெளியான எல்லா வகையான தகவல்களும், ஆதாரங்களும், நாசாவின் (NASA) லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றிற்கு ஈடாகாது என்றே கூறலாம்.

ஏனெனில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, முதல் முறையாக ஒரு "ஏலியன்" உலகத்தை "நேரடியாக" புகைப்படம் எடுத்துள்ளது!

விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு புரட்சி!

விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு புரட்சி!

நாசாவால் "கைப்பற்றப்பட்டுள்ள" ஒரு வேற்று கிரகத்தின் நேரடி புகைப்படமானது, எக்ஸோபிளானெட் (Exoplanet) தொடர்பான ஆராய்ச்சியில் ஒரு புரட்சி என்றே கூறலாம்!

ஏனென்றால், எக்ஸோப்ளானெட்டுகளை நேரடியாக "கவனிப்பது" மிகவும் கடினம், ஏனெனில் அவைகள், தான் சுற்றும் நட்சத்திரங்களை விட மிகவும் மங்கலாகவே தெரியும்.

அதுமட்டுமின்றி!

அதுமட்டுமின்றி!

பெரும்பாலான எக்ஸோபிளானெட்கள் ஆனது, அந்தந்த நட்சத்திரங்களின் பிரகாசத்தின் விளைவாக, மிகவும் தற்காலிகமாகவே காணப்படுகின்றன.

ஆனால் இந்த நிலை, அதாவது வேற்று கிரகங்களை நேரடியாக கண்காணிக்க முடியாத நிலை, விரைவில் மாறலாம் என்பது போல் தெரிகிறது.

பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!பிளான் பண்ணல, ஸ்கெட்ச் போடல! அதுக்கே சரிந்து போன சீனா; மேல் நோக்கி இந்தியா!

அதற்காக ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பிற்கு நன்றி!

அதற்காக ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பிற்கு நன்றி!

ஏனென்றால், முதல் முறையாக ஒரு எக்ஸோபிளானட்டை நேரடியாக புகைப்படம் எடுக்க நாசாவிற்கு உதவி உள்ளது - சமீப காலமாக சாமானியர்கள் மத்தியில் கூட மிகவும் பிரபலமாக உள்ள விண்வெளி தொலைநோக்கியான - ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பே ஆகும்!

குறிப்பிடத்தக்க வண்ணம், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஆனது அதன் அறிவியல் செயல்பாடுகளை தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள்ளேயே, நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள ஒரு கிரகத்தின் "முதல் நேரடி புகைப்படத்தை" நமக்கு வழங்கியுள்ளது!

அதெல்லாம் சரி எக்ஸோப்ளானெட் என்றால் என்ன?

அதெல்லாம் சரி எக்ஸோப்ளானெட் என்றால் என்ன?

மிகவும் எளிமையாக வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், எக்ஸோப்ளானெட் என்றால் வேற்று கிரகம் என்று அர்த்தம்.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள எந்தவொரு கிரகமுமே எக்ஸோப்ளானெட் தான்!

விண்ணில்.. சில

விண்ணில்.. சில "அத்துவிட்ட" எக்ஸோப்ளானெட்களும் உள்ளன!

பெரும்பாலான எக்ஸோப்ளானெட்கள் மற்ற நட்சத்திரங்களையே சுற்றி வருகின்றன, ஆனால் சில எக்ஸோப்ளானெட்கள் மட்டும், விண்ணில் "சுதந்திரமாக மிதக்கின்றன", அதாவது அவைகள் எந்தவொரு நட்சத்திரத்துடனும் இணைக்கப்படவில்லை; அவைகள் Free-floating exoplanets அல்லது Rogue planets என்று அழைக்கப்படுகின்றன.

விண்கற்களின் துகள்களை சேர்த்து செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?விண்கற்களின் துகள்களை சேர்த்து செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?

நாசாவால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள கிரகம் எப்படிப்பட்டது?

நாசாவால் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள கிரகம் எப்படிப்பட்டது?

பூமியிலிருந்து சுமார் 385 ஒளியாண்டுகள் (Light Years) தொலைவில் HIP 65426 என்று பெயரிடப்பட்ட ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அந்த நட்சத்திரத்தை சுற்றும் ஒரு பெரிய வாயு கிரகத்தை (Gas Gaint) தான் நாசா புகைப்படம் எடுத்துள்ளது, அதன் பெயர் HIP 65426 b ஆகும்!

இந்த புகைப்படத்திற்காக வெப் டெலஸ்கோப் ஆனது அதன் நியர்-இன்ஃப்ராரெட் கேமரா (Near-Infrared Camera - NIRCam) மற்றும் மிட்-இன்ஃப்ராரெட் இன்ஸ்ட்ருமென்ட் (Mid-Infrared Instrument - MIRI) ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளது.

இந்த கிரகம் மட்டும் எப்படி நேரடியாக

இந்த கிரகம் மட்டும் எப்படி நேரடியாக "சிக்கியது"!

முன்னரே குறிப்பிட்டபடி, எக்ஸோப்ளானெட்டுகளை நேரடியாக கண்காணிப்பது அல்லது பார்ப்பது மிகவும் கடினம்,

ஆனால் HIP 65426 நட்சத்திரத்தை சுற்றும் HIP 65426 b எக்ஸோபிளான்ட் ஆனது, இரண்டு முக்கியமான காரணங்களின் விளைவாகவே நாசாவிடம் நேரடியாக சிக்கி உள்ளது!

அதென்ன காரணங்கள்?

அதென்ன காரணங்கள்?

முதல் காரணம் - குறிப்பிட்ட வேற்று கிரகம் ஆனது அதன் தாய் நட்சத்திரத்திலிருந்து மிகவும் தொலைவில் உள்ளது. அதாவது சூரியனிலிருந்து பூமிக்கு இடையே இருப்பதை போன்ற 100 மடங்கு தூரத்தில் உள்ளது.

இரண்டாவது காரணம் - HIP 65426 b என்பது ஒரு மிகப்பெரிய கிரகம் ஆகும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோளான வியாழனை விட 12 மடங்கு பெரியதாக உள்ளது!

இந்த இரண்டு காரணங்களின் விளைவாகவே HIP 65426-ஐ சுற்றிவரும் HIP 65426 b எக்ஸோபிளானட் ஆனது நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பால் நேரடியாக புகைப்படமாக்கப்பட்டுள்ளது.

இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா?

இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ முடியுமா?

வாய்ப்பில்லை ராஜா! HIP 65426 b ஆனது மிகவும் இளமையான ஒரு கிரகமாக இருக்கிறது. இது 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே பழமையானது போல் தெரிகிறது. நினைவூட்டும் வண்ணம், பூமியின் வாய்த்து 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.

மேலும் HIP 65426 b ஆனது ஒரு வாயு கிரகம் என்பதால், அதில் உயிர்கள் வாழ வாய்ப்பே இல்லை!

வெடித்து சிதறிய SpaceX ராக்கெட்; சுக்குநூறான எலான் மஸ்க்கின் கனவு திட்டம்!வெடித்து சிதறிய SpaceX ராக்கெட்; சுக்குநூறான எலான் மஸ்க்கின் கனவு திட்டம்!

இது ஒரு விண்வெளி புதையல்!

இது ஒரு விண்வெளி புதையல்!

"இந்த புகைப்படத்தை ஆராய்ச்சி செய்வது விண்வெளியின் புதையலை தோண்டுவதற்கு சமம்" என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வானியலாளர் ஆன ஆரின் கார்ட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் "முதலில் நான் நட்சத்திரத்திலிருந்து வெளிச்சத்தை மட்டுமே பார்த்தேன், ஆனால் அதை மிகவும் கவனமாக இமேஜ் ப்ராசஸிங் செய்த பின்னரே, அந்த ஒளியை அகற்றி கிரகத்தை வெளிக்கொணர முடிந்தது." என்றும் அவர் கூறி உள்ளார்!

Best Mobiles in India

English summary
First Time NASA Takes Direct Photo Of An Exoplanet Using James Webb Space Telescope

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X