Home
Mobile

மச்சான் சாய்ச்சு புட்டான்.. OnePlus-ன் 7500mAh பேட்டரி மினி போன்.. போட்டிக்கு வரும் புது iQOO போன்!

ஐக்யூ (iQOO) நிறுவனம் ஆனது பெர்ஃபார்மென்ஸை மையமாக கொண்ட ஒரு புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. ஏனெனில், ஐக்யூ 15 சீரீஸில் (iQOO 15 Series) மற்றொரு மாடல் வரவிருப்பதாக ஒரு புதிய லீக் சுட்டிக்காட்டுகிறது.

தற்போதைய ஐக்யூ 15 சீரீஸில் ஐக்யூ 15 (iQOO 15) மற்றும் ஐக்யூ 15 அல்ட்ரா (iQOO 15 Ultra) என்கிற 2 மாடல்கள் இருந்தாலும், கேமிங்கை மையமாக கொண்ட அம்சங்களை பரந்த பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிறுவனம் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தக்கூடும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

OnePlus 7500mAh பேட்டரி மினி போன்.. போட்டிக்கு வரும் புது iQOO போன்!

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த சமீபத்திய லீக்கின் படி, ஐக்யூ 15 சீரீஸில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படும் புதிய மற்றும் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆனது ஐக்யூ 15டி (iQOO 15T) என்று அழைக்கப்படலாம். இது, அல்ட்ரா மாடலில் உள்ள பில்ட்-இன் கூலிங் ஃபேன் உட்பட சில உயர்நிலை அம்சங்களை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை, மேம்பட்ட வெப்ப மேலாண்மையை எளிதில் அணுகக்கூடிய டிவைஸ்களுக்கு கொண்டு வர ஐக்யூ நிறுவனம் முயன்று வருவதை குறிக்கிறது. மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி இது சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மற்றும் உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) மினி ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக நிற்கும்!

ஐக்யூ 15டி எப்போது அறிமுகம் செய்யப்படலாம்? லான்ச் டைம்லைனை பொறுத்தவரை, இது 2026 அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் ஐக்யூ 16 மாடலுக்கு முன்பாகவே அறிமுகம் செய்யபப்பட வாய்ப்புள்ளது. ஆக ஐக்யூ 15டி மாடலின் அறிமுகம் 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடக்கலாம்.

ஐக்யூ 15டி ஸ்மார்ட்போனை தவிர, ஐக்யூ நிறுவனமானது ஐக்யூ நியோ 11 மற்றும் ஐக்யூ நியோ 11 ப்ரோ மாடல்களிலும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் 6.83-இன்ச் 2கே ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவைகள் முறையே ஸ்னாப்டிராகன் 8 எலைட் மற்றும் டைமென்சிட்டி 9500 சிப்செட்களால் இயக்கப்படலாம்.

இவற்றில் 8,000mAh வரையிலான பேட்டரிகள், ஒரு மெட்டல் மிடில் ஃப்ரேம் மற்றும் இன்-ஸ்க்ரீன் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் ஆகியவை இடம்பெறலாம். ஆக இந்த ஸ்மார்ட்போன்கள் செயல்திறன் மற்றும் கட்டமைப்பு தரம் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தும் என்பது போல் தெரிகிறது.

ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஐக்யூ 16 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, இது 165 ஹெர்ட்ஸ் அல்லது 185 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 2கே சாம்சங் டிஸ்பிளேவுடன் வரக்கூடும் என்று ஆரம்பகட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட்டை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 200-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், அதனுடன் 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகளும் இடம்பெறலாம். இப்போதைக்கு இந்த லீக் அம்சங்களை "முழுமையாக" நம்பாமல் இருப்பதே நல்லது மற்றும் ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை உறுதிப்படுத்தும் கூடுதல் அறிக்கைகளுக்காக காத்திருப்பது நல்லது.

சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 165Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32 இன்ச் ஃபுல்-எச்டி+ (1216 x 2640 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- குவால்காம் 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ஒப்போவின் லூமோ இமேஜிங் இன்ஜின் கொண்ட டூயல் ரியர் கேமரா

- சோனி அல்ட்ரா விஷன் சென்சார் உடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் மற்றும் 7x வரை லாஸ்லெஸ் டிஜிட்டல் ஜூம் திறன்களுடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/2.4) பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ
- முன்புறத்தில் 16-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7500mAh கிளேசியர் பேட்டரி
- 100W சூப்பர்வூக் வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 15T Launch timeline Design Specifications tipped Expected to Compete With OnePlus 15T
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X