வீட்டுக்கு 1 ஆர்டர்.. 45 சதவீத ஆஃபரில் 75 இன்ச் 4K LED டிவி.. டால்பி விஷன்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
தோஷிபா சி3550என்பி 75 இன்ச் கூகுள் டிவி (TOSHIBA C350NP 75 inch Google TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. 75 இன்ச் எல்இடி டிஸ்பிளே மட்டுமல்லாமல், 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், டால்பி விஷன் கிடைக்கிறது. ஆடியோவிலும் டால்பி அட்மோஸ் மற்றும் 36 W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. இந்த தோஷிபா சி3550என்பி 75 இன்ச் கூகுள் டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
55 இன்ச் டிவி மாடல்களே இப்போது பலருக்கு சின்ன டிவி மாடலாக தோன்றுகிறது. ஏனென்றால், 55 இன்ச் டிவி கிடைக்கும் விலையில் இப்போது 65 இன்ச் மற்றும் 75 இன்ச் டிவி மாடல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சில பிராண்ட்களில் மட்டுமே பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட் டிவிகள் பட்ஜெட் விலையில் கிடைக்கும். இதில் தோஷிபா பட்டையை கிளப்புகிறது.

இப்போது, 45 சதவீத தள்ளுபடி விலைக்கு தோஷிபா சி3550என்பி 75 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (TOSHIBA C350NP 75 inch Ultra HD 4K Smart Google TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.62,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.61,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
1 வருட வாரண்டி கிடைக்கிறது. சி350என்பி (C350NP) சீரிஸ் மற்றும் 75சி350என்பி (75C350NP) மாடலின் கீழ் இந்த தோஷிபா சி3550என்பி 75 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். பிளாக் (Black) கலரில் கிடைக்கிறது. இது 2025 எடிஷன் கிடையாது. 2024 ஆம் ஆண்டு மாடலாக இருக்கிறது. இதை மட்டும் பார்த்து கொள்ளுங்கள்.
தோஷிபா சி3550என்பி 75 இன்ச் கூகுள் டிவி அம்சங்கள் (TOSHIBA C350NP 75 inch Google TV Specifications): 75 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த தோஷிபா சி3550என்பி 75 இன்ச் கூகுள் டிவி கொண்டுள்ளது. மேலும், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், டால்பி விஷன் (Dolby Vision) உள்ளது.
எச்டிஆர் 10 (HDR 10), ஏஐ 4கே அப்ஸ்கேலிங் (AI 4K Upscaling), ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode), கேம் மோட் (Game Mode) பீச்சர்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ரெக்சா என்ஜின் இசட்ஆர் (REGZA Engine ZR) கொடுக்கப்பட்டு உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த தோஷிபா சி3550என்பி 75 இன்ச் கூகுள் டிவி கொடுத்து உள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கிடைக்கிறது.
மேலும், டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எக்ஸ் (DTS X) ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. 36 W ஆடியோ அவுட்புட் மற்றும் 2.0 சேனல் ஸ்பீக்கர் கான்பிகிரேஷன் கிடைக்கிறது. டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter) கிடைக்கிறது. ப்ளூடூத் (Bluetooth), ஈதர்நெட் (Ethernet), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) மற்றும் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








