பொளக்குது விற்பனை.. ரூ.15,199 க்கு 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. 14GB ரேம்.. எந்த மாடல்?
ரியல்மி பி4 லைட் 5ஜி (Realme P4 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.15,000 பட்ஜெட் செக்மெண்டில் 7000mAh பேட்டரி கொண்ட மாடலாக இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 14 ஜிபி ரேம், 15W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இப்போது, தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரியல்மி நிறுவனத்தின் பி சீரிஸ் மாடல்கள் பட்ஜெட் விலைக்கு பிரீமியம் லுக் கொடுத்து வருகின்றன. இதில் ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனானது லேட்டஸ்ட் மாடலாக களமிறங்கியது. லுக் மட்டுமல்லாமல், டியூரபிலிட்டியில் மிரளவிட்டது. ஏனென்றால், ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) மட்டுமல்லாமல், மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.

ஆகவே, எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD 810H) சர்டிபிகேஷன் கொண்டுள்ளது. மேலும், இந்த விலைக்கு ஏற்ப IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கிடைக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 30 சதவீத தள்ளுபடி போக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த தள்ளுபடியுடன் ரூ.15,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.800 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.15,199 விலைக்கு இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். மோசைக் கிரீன் (Mosaic Green), மொசைக் ப்ளூ (Mosaic Blue) ஆகிய 2 கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ரியல்மி பி4 லைட் 5ஜி அம்சங்கள் (Realme P4 Lite 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்து உள்ளது.
ஏஐ பூஸ்ட் (AI Boost) உள்ளிட்ட பீச்சர்களுடன் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த ரியல்மி பி4 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கேமராவுக்கு ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image) பீச்சர்கள் கிடைக்கின்றன. இதில் ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0), ஏஐ கிளியர் பேஸ் (AI Clear Face) மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் (AI Smart Image Matting) உள்ளிட்ட பீச்சர்கள் அணுக கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.
மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. மேலும், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் மதர் போர்டுக்கு பவர் செல்லும்படி பைபாஸ் சார்ஜிங் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








