கோடை வெயில் கொளுத்துதா? டைசன் mini cool fan வந்தாச்சு.. 5000எம்ஏஎச் பேட்டரி.. என்ன விலை?
இந்தியாவில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பல்வேறு இடங்களில் வெப்பம் மற்றும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. அதுவும் வெயில் தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சிலர் வெயிலுக்கு பயந்து விட்டிக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
அதேபோல் தற்போது வெயில் அதிகம் உள்ளதால் ஏசி, ஏர் கூலர், மினி ஏர் கூலர் போன்ற சாதனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக இப்போது இது போன்ற சாதனங்கள் தான் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் டைசன் நிறுவனம் தனது முதல் டைசன் ஹஷ்ஜெட் மினி கூல் ஃபேன் (Dyson HushJet Mini Cool fan) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக டைசன் HushJet மினி கூல் ஃபேன் மாடல் ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய டைசன் HushJet மினி கூல் ஃபேன் மாடலின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
டைசன் HushJet மினி கூல் ஃபேன் அம்சங்கள் (Dyson HushJet Mini Cool fan specifications): இந்த புதிய டைசன் HushJet மினி கூல் ஃபேன் மாடல் ஆனது 212 கிராம் எடை கொண்டது. அதேபோல் இது 65,000 RPM வரை செயல்படும் பிரஷ்லெஸ் DC மோட்டாரால் இயக்கப்படுகிறது. அதுவும் இந்த மின் கூல் ஃபேன் ஆனது 38 மிமீ HushJet ப்ரொஜெக்ஷன் சிஸ்டத்தின் ஆதரவுடன் (HushJet projection system) வினாடிக்கு 25 மீட்டர் வரையிலான காற்றோட்ட வேகத்தை வழங்குகிறது.
இந்த புதிய மினி கூல் ஃபேன் மாடல் ஆனது அதிக இரைச்சலைக் கொடுக்காது. அதாவது இந்த சாதனத்தில் சத்தம் அதிகம் இல்லாமல் காற்று சீராக வரும் என்று டைசன் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த டைசன் HushJet மினி கூல் ஃபேன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டைசன் நிறுவனம்.

ஐந்து ஏர்ஃப்ளோ ஸ்பீடு செட்டிங்ஸ் (Airflow speed settings) கொண்டுள்ளது இந்த டைசன் HushJet மினி கூல் ஃபேன். இதுதவிர தேவையான போது அதிக திறனை வழங்க பூஸ்ட் மோட் (Boost mode) வசதியும் இதில் உள்ளது. 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.
அதுவும் இது ஒரே சார்ஜில் 6 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் தரும் என டைசன் நிறுவனம் கூறுகிறது. அதேபோல் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது டைசன் HushJet மினி கூல் ஃபேன். மேலும் இந்த சாதனத்தை கையில் பிடித்துப் பயன்படுத்தவும், மேசையில் வைத்துப் பயன்படுத்தவும், Neck Dock மூலம் பயன்படுத்தவும் முடியும்.

குறிப்பாக டைசன் HushJet மினி கூல் ஃபேன் மாடல் உடன் நெக் டாக் (Neck Dock), சார்ஜிங் ஸ்டாண்ட், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் கேபிள் மற்றும் Travel Pouch போன்றவை வழங்கப்படும். இங்க்/கோபால்ட், கார்னிலியன்/ஸ்கை மற்றும் ஸ்டோன்/பிளஷ் ஆகிய மூன்று நிறங்களில் இந்த புதிய சாதனம் வெளிவந்துள்ளது.
ஆனால் டைசன் HushJet மினி கூல் ஃபேன் மாடல் ஆனது தற்போது உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. டைசன் HushJet மினி கூல் ஃபேன் மாடலின் விலை USD 99.99 (இந்திய மதிப்பில் ரூ.9,269) ஆக உள்ளது. அதேசமயம் இந்த சாதனம் இந்தியாவில் சற்று குறைவான விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








