Home
Mobile

புது OnePlus போன் வாங்க சரியான நேரம்.. 9000mAh பேட்டரி வந்ததும் 6800mAh மாடல் மீது டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக நோர்ட் 6 இந்திய சந்தையில் அறிமுகமான வேகத்தில் முந்தைய மாடல் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் மீது "சுவாரசியமான" டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எவ்வளவு? எங்கே? ஒன்பிளஸ் நோர்ட் 6 -ன் விலை என்ன? இரண்டில் எதை வாங்கலாம்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் நோர்ட் 5 மீதான ஆபர்: அமேசான் இந்தியா வலைத்தளம் மற்றும் ஒன்பிளஸ்இந்தியா ஆகிய 2 தளங்களிலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போன் மீது ரூ.1500 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. சந்தையில் நிலவும் மெமரி பற்றாக்குறை காரணமாக, சமீபத்தில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.33,999 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது.

9000mAh பேட்டரி வந்ததும் 6800mAh மாடல் மீது டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

தற்போது அந்த விலை உயர்விற்கு சற்றே ஆறுதல் அளிக்கும்படியாக ரூ.1500 பேங்க் டிஸ்கவுண்ட் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனை ரூ.32,499 க்கு வாங்க முடியும். இது எக்ஸ்சேன்ஜ் போனஸ் இல்லாத டிஸ்கவுண்ட் விலையாகும். தகுதியான ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்வதன் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் ஃபைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ இன்னும் குறைக்க முடியும்.

புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 விலை என்ன? இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.38,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் (ஃபுல் ஸ்வைப்) ரூ.2,000 தள்ளுபடியையும், ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகளில் (இஎம்ஐ பரிவர்த்தனைகள்) ரூ.3,000 தள்ளுபடியையும் பெறலாம். இதன் மூலம், 8ஜிபி மற்றும் 12ஜிபி வேரியண்ட்களின் விலை முறையே ரூ.35,999 மற்றும் ரூ.38,999 ஆக குறைக்க முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6 VS ஒன்பிளஸ் நோர்ட் 5: பேங்க் ஆபர் விலைகளை ஒப்பிட்டு பார்த்தால், ஒன்பிளஸ் நோர்ட் 5-ஐ ரூ.32,499 க்கும், ஒன்பிளஸ் நோர்ட் 6-ஐ ரூ.35,999 க்கும் வாங்க முடியும்; அதாவது இரண்டிற்குமான இடைவெளி ரூ.3500 தான். லேட்டஸ்ட் மாடல் மற்றும் அதில் உள்ள பெரிய அப்கிரேட்களை விரும்புபவர்கள் கொஞ்சம் அதிகம் செலவு செய்து ஒன்பிளஸ் நோர்ட் 6 மாடலையே வாங்கலாம்.

புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.78-இன்ச் 165ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே
- அட்ரினோ 825 GPU உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS), எப்/1.8 அபெர்ச்சர் மற்றும் PDAF உடனான 50-மெகாபிக்சல் சோனி LYT-600 CMOS ப்ரைமரி கேமரா

- 112-டிகிரி பீல்ட் ஆப் வியூ உடனான 8-மெகாபிக்சல் ஆம்னிவிஷன் OV08F அல்ட்ரா-வைட் கேமரா
- செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 80W சூப்பர்VOOC சார்ஜிங் ஆதரவு
- 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங், பைபாஸ் சார்ஜிங்
- 9000mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (சோனி LYT-700 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர்)

- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- சாம்சங் ISOCELL JN5 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W சூப்பர்வூக் சார்ஜிங் உடனான 6800mAh பேட்டரி

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 gets Discount Just After OnePlus Nord 6 India Launch Check Out Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X