Home
Mobile

Redmi இனி நீ ராஜா.. ஹீட் வெளியேற துளைகள், 100W சார்ஜிங், 8500mAh பேட்டரி, IP69 உடன் புது போன்.. எந்த மாடல்?

ஷாவ்மீ நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி நிறுவனம் "வேற லெவல்" அம்சங்களை கொண்ட ஒரு புதிய "மேக்ஸ்" ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது ரெட்மி கே90 மேக்ஸ் (Redmi K90 Max) மாடல் ஆகும். முன்னதாக ரெட்மி கே90 சீரீஸின் கீழ் சீனாவில் அறிமுகமான ஸ்மார்ட்போன்கள் உலகளவில் போக்கோ எப்8 சீரிஸ் ஆக அறிமுகம் செய்யப்பட்டன.

அதாவது ரெட்மி கே90 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது போக்கோ எப்8 ப்ரோ (POCO F8 Pro) மற்றும் போக்கோ எப்8 அல்ட்ரா (POCO F8 Ultra) ஸ்மார்ட்போன்களாக உலகளவில் அறிமுகமாகின்றன. ஆக சீனாவில் அறிமுகமாகும் ரெட்மி கே90 மேக்ஸ் மீது நாமொரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை. ரெட்மி கே90 மேக்ஸ் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

Redmi புது போன்.. ஹீட் வெளியேற துளைகள், 100W சார்ஜிங், 8500mAh பேட்டரி

ரெட்மி நிறுவனம் அதன் ரெட்மி கே90 மேக்ஸ்-ன் அதிகாரப்பூர்வ படங்களை வெளியிட்டு அதை டீஸ் செய்ய தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போ, ஏப்ரல் 2026 க்குள் சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற யூகங்களை வலுவாகி உள்ளது. மேலும் வெளியான புகைப்படங்களின் வழியாக குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் டிசைனை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது.

ரெட்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை புதிய ஸ்பேஸ் சில்வர் (Space Silver) கலரில் காட்சிப்படுத்தி உள்ளது. இது "செம்மைப்படுத்தப்பட்ட" லுக்கை மட்டுமின்றி, ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது செயல்திறனில் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

ரெட்மி கே90 மேக்ஸ் டிசைன்: ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் ஸ்பேஸ் சில்வர் வேரியன்ட் ஆனது "கூல்-டோன்டு சில்வர் பினிஷ்" அழகியலுடன், அலுமினியம் அலாய் கொண்ட பிளாட் ஆன ஃப்ரேமுடன் வருகிறது, இது ஸ்மார்ட்போனிற்கு சுத்தமான மற்றும் எளிமையான தோற்றத்தை அளிக்கிறது. முன்பக்கம் எப்படி உள்ளது என்பதை தெரியவில்லை என்றாலும், இது ஒரு கேமிங்-போகஸ் கொண்ட போன் என்பதால் பெரும்பாலும் பிளாட் ஆன தடிஸ்பிளேவுடன் தான் வரும் என்று தெரிகிறது.

பேக் பேனலில் இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக வந்த ரெட்மி கே90 ப்ரோ மேக்ஸ் வேரியன்டை போன்று கிடைமட்டமாக அமைந்த கேமரா மாட்யூலை கொண்டுள்ளது, ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. மாட்யூலின் ஒரு பகுதியில் பாரம்பரிய ஸ்பீக்கர் அமைப்பிற்கு பதிலாக இன்டர்னல் கூலிங் சிஸ்டமிற்கான காற்றோட்ட வெளியீடு (Vent) உள்ளது.

இதற்கு கீழே, பேனல் முழுவதும் ஒரு அகலமான காற்று வெளியீட்டு வழி (Air outlet stretches) நீண்டிருக்கிறது, இது மிகவும் தீவிரமான வெப்ப மேலாண்மை அமைப்பை சுட்டிக்காட்டுகிறது. இந்த கூலிங் சிஸ்டமில் 18மிமீ-க்கும் அதிகமான அளவுள்ள பெரிய இன்டர்னல் ஃபேன் இருக்கும், இது காற்றோட்ட திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் - தீவிர பயன்பாட்டின் போது வழக்கமான சொல்யூஷன்களை விட வேகமான வெப்ப சிதறல் மற்றும் காற்றோட்டத்தில் அளவிடக்கூடிய முன்னேற்றங்கள் இருக்கும் என்று ரெட்மி கூறுகிறது. இந்த அமைப்பு மதர்போர்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது, இது தூசு மற்றும் நீர் எதிர்ப்பை பராமரிக்கும் அதே நேரத்தில் நீடித்த தன்மையை உறுதி செய்கிறது.

ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதுவரை வெளியான (லீக்ஸ்) அறிக்கைகளின் படி, ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

சிப்செட்டை பொறுத்தவரை, இது டைமன்சிட்டி 9500 சிப்செட்டுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 100W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 8500mAh பெரிய பேட்டரியையும், பாதுகாப்பான அன்லாக்கிங்கிற்காக அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடியோ அம்சங்களை பொறுத்தவரை, இது போஸ்-ட்யூன்டு சிமெட்ரிக்கல் டூயல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கலாம், மேலும் ஹேப்டிக் ஃபீட்பேக் ஒரு பெரிய எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டாரால் கையாளப்படலாம். ரெட்மி கே90 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் வெப்ப மேலாண்மைக்காக உள்ளமைக்கப்பட்ட கூலிக ஃபேன் அமைப்பையும், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங்களையும் தக்கவைத்துக்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi K90 Max First Look It Seems This Phone Got Best internal Cooling System Design See Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X