Home
Mobile

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. 9020mAh பேட்டரி, IP69, 16GB ரேம் உடன் புது iQOO 5ஜி போன் வருது!

9000mAh க்கும் அதிகமான பேட்டரி கொண்ட ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனான ஐக்யூ இஸட்11 (iQOO Z11) மாடல் ஆனது கூடிய விரைவில் சீனாவிற்கு வெளியே வரக்கூடும் என சில உலகளாவிய சான்றிதழ் இணையதளங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதாவது கடந்த மார்ச் மாத இறுதியில் சீனாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் மற்ற சந்தைக்களுக்கும் வரவுள்ளது. ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் ஆனது இந்தோனேசியாவின் SDPPI சான்றிதழ் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு, நாட்டில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்களை அறிமுகப்படுத்த ஒப்புதல் வழங்கும் ஒரு அதிகார அமைப்பாகும்.

9020mAh பேட்டரி, IP69, 16GB ரேம் உடன் புது iQOO 5ஜி போன் வருது!

மேலும் I2512 என்ற மாடல் நம்பருடன் வரும் ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போனானது தாய்லாந்தின் தொலைத்தொடர்புத் துறையை மேற்பார்வையிடும் ஒழுங்குமுறை அமைப்பான அந்நாட்டின் தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையத்திடமிருந்தும் (NBTC) சான்றிதழையும் பெற்றுள்ளது. இந்த சர்வதேச சான்றிதழ்கள் அனைத்தும், ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போனின் உடனடி உலகளாவிய வெளியீட்டை குறிக்கின்றன

ஆனாலும் ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போன் இந்தியாவை சார்ந்த சான்றிதழ் பட்டியல்களில் இன்னும் இடம்பெறவில்லை. இதை கருத்தில் கொண்டு, வரவிருக்கும் விவோ டி5 ப்ரோ (Vivo T5 Pro) போன்ற மற்ற ஐக்யூ மற்றும் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு வழிவிடுவதற்காக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது அதன் வெளியீடு தற்போதைக்கு முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஏப்ரல் 15 அறிமுகமாகும் விவோ டி5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம்: டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரியின் கூற்றுப்படி, இந்த்ஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.30,000 ஆக இருக்கலாம். மேலும் 12ஐபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.36,999 வரை செல்லலாம். இருப்பினும் விவோ நிறுவனம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை

சீனாவில் அறிமுகமான ஐக்யூ இஸட்11 விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB வேரியண்ட்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.31,200-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12GB + 256GB, 16GB + 256GB, 12GB + 512GB, மற்றும் 16GB + 512GB ஆப்ஷன்களின் விலைகள் முறையே (இந்திய ரூபாய் மதிப்பின்படி) ரூ.34,000, ரூ.38,100, ரூ.40,800 மற்றும் ரூ.46,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஐக்யூ இஸட்11 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 2800×1260 ரெசல்யூஷன், 165Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கேமிங் சூழல்களில் 300Hz டச் சாம்பிளிங் ரேட், HDR ஆதரவு மற்றும் P3 வைட் கலர் கேமட் ஆகியவற்றுடன் கூடிய 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே
- 4nm ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 சிப்செட்
- 16GB வரையிலான ரேம் மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ்

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட OriginOS 6 ஓஎஸ்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 4K வீடியோ ரெக்கார்ட் வசதி கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 7K ஐஸ் டோம் VC லிக்விட் கூலிங் சிஸ்டம்
- 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் OTG ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 9020mAh பேட்டரி
- IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11 with 9020mAh Battery Expected to Launch Soon Globally See Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X