சீனாவிற்கு.. நிலவில் கிடைத்த 6வது பொக்கிஷம்! மண்டை குடைச்சலில் அமெரிக்கா!

|

சீனாவிற்கும், அமெரிக்காவிற்கும் (China Vs America) இடையிலான விண்வெளிப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், சீனாவிற்கு நிலவில் "பொக்கிஷம்" ஒன்று கிடைத்துள்ளது.

அதென்ன பொக்கிஷம்? அதை வைத்து சீனா செய்யப்போகும் வேலைகள் என்னென்ன? அதனால் அமெரிக்காவிற்கு ஏற்படப்போகும் மண்டை குடைச்சல்கள் என்னென்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

சீனாவிற்கு கிடைத்த

சீனாவிற்கு கிடைத்த "அந்த" பொக்கிஷம்!

சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (China's National Space Administration - CNSA) மற்றும் சீன அணுசக்தி ஆணையம் (China Atomic Energy Authority - CAEAசி) ஆகிய இரண்டும் இணைந்து, கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி ஒரு நம்பமுடியாத அறிக்கையை வெளியிட்டன.

சீனாவின் சாங்-5 மிஷன் (Chang'e-5 Mission) வழியாக சந்திரனில் இருந்து பூமிக்கு கொண்டுவரப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய சந்திர கனிமத்தை (Lunar Mineral) கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளனர்.

விண்வெளியில் சிக்கிய விண்வெளியில் சிக்கிய "சிலந்தி" உருவம்! புகைப்படம் எடுத்த நாசா!

இது

இது "6-வது" பொக்கிஷம் ஆகும்!

சீனாவின் இந்த சமீபத்திய கண்டுபிடிப்பானது, சீனாவிற்கு கிடைத்த முதல் சந்திர கனிமமாக இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் இது ஆறாவது முறையாகும்.

அதே சமயம், நிலவில் முற்றிலும் புதிய கனிமத்தை கண்டுபிடிக்கும் மூன்றாவது நாடு என்கிற பெருமையும் சீனாவிற்கு கிடைத்துள்ளது.

அதாவது அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு அடுத்தபடியாக "நிலவில் புதிய கனிமங்களை கண்டுபிடித்த நாடுகளின் பட்டியலில்" சீனா சேர்ந்துள்ளது.

1.73 கிலோவை அள்ளிக்கொண்டு வந்த சீனா!

1.73 கிலோவை அள்ளிக்கொண்டு வந்த சீனா!

கடந்த 2021 ஆம் ஆண்டில், சீனாவின் Chang'e 5 விண்கலம் ஆனது 3.81 பவுண்டுகள் (அதாவது 1.73 கிலோகிராம்) எடையுள்ள நிலவு பாறையுடன் பூமிக்கு திரும்பியது.

அதில் இரண்டு சிறிய துண்டுகள் சுமார் 1.97 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?

அமெரிக்கா கொண்டு வந்த 22 கிலோ!

அமெரிக்கா கொண்டு வந்த 22 கிலோ!

பெரும்பாலான உலக நாடுகள் நிலவை வேடிக்கை மட்டுமே பார்த்த காலத்தில், அமெரிக்கா சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 49 பவுண்டுகள் (அதாவது 22 கிலோகிராம்) எடையுள்ள "பொருட்களை" பூமிக்கு கொண்டு வந்தது.

கடந்த ஜூலை 1969 இல், அமெரிக்காவின் அப்பல்லோ 11 மிஷன் வழியாக, மற்றொரு கிரகத்தின் (நிலவு) மாதிரிகள் பூமிக்கு முதல் முறையாக கொண்டு வரப்பட்டது.

அதுமட்டுமா?

அதுமட்டுமா?

சீனா "தற்போது" கொண்டு வந்த நிலவின் பாறைகள் ஆனது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அப்பல்லோவால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட நிலவு பாறைகளை விட "இளையவை"களாக உள்ளன!

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சீனாவின் நிலவு பாறைகள் நாசாவின் நிலவு பாறைகளை விட குறைந்தது ஒரு பில்லியன் ஆண்டுகள் "வயது குறைந்தவைகளாக" உள்ளன!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

எதிர்காலத்தில் இந்த கனிமம்..?

எதிர்காலத்தில் இந்த கனிமம்..?

சீனாவால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிலவு கனிமமானது - ஒரு கிளியர் ஆன, கலர்லெஸ் காலம்னர் கிரிஸ்டல் (Clear, Colorless Columnar Crystal) ஆகும்.

சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள க்ளோபல் டைம்ஸ் நாளிதழின் படி, புதிய சந்திர கனிமத்தை கண்டுபிடித்த மூன்றாவது நாடாக உருமாறிய ஒரு நாளுக்குப் பிறகு, சீனா அந்த கனிமத்திற்கு Changesite-(Y) என்று பெயரிட்டுள்ளது.

அதே க்ளோபல் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்த கனிமத்தில் ஹீலியம்-3 உள்ளது, இது எதிர்கால ஆற்றல் மூலமாக (Source of Energy) கூட இருக்கலாம்!

அமெரிக்காவிற்கு அடுக்கடுக்கான டென்ஷனை கொடுக்கும் சீனா!

அமெரிக்காவிற்கு அடுக்கடுக்கான டென்ஷனை கொடுக்கும் சீனா!

அமெரிக்காவின் மிகப்பெரிய மூன் மிஷன் (Moon Mission) ஆன ஆர்ட்டெமிஸ் ஒன்று (Artemis I), மீண்டும்-மீண்டும் ஒத்திவைக்கப்படும் இந்த சூழ்நிலையில்..

சீனா, நிலவில் ஒரு புதிய கனிமத்தை கண்டுபிடித்துள்ளது, கண்டிப்பாக அமெரிக்காவை எரிச்சல் அடைய வைத்திருக்கும்; கடும் அழுதத்தையும் கொடுத்திருக்கும்!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

போதாக்குறைக்கு?

போதாக்குறைக்கு?

ஏற்கனவே 'ப்ரெஷரில்' உள்ள நாசாவிற்கு, ரஷ்யாவுடன் இணைந்து, நிலவின் தென் துருவத்தில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கும் சீனாவின் திட்டமானது, அமெரிக்காவிற்கு கூடுதல் பிரெஷர் ஆகவும் இருக்கலாம்.

இப்படியாக சீனாவின் சமீபத்திய விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்பான நடவடிக்கைகள் எல்லாமே, அமெரிக்காவிற்கு (நாசாவிற்கு) அடுக்கடுக்கான தலைவலிகளாகவே உள்ளன!

இப்படியாக.. செவ்வாய் வரை சென்றுள்ள சீனா!

இப்படியாக.. செவ்வாய் வரை சென்றுள்ள சீனா!

மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளுக்குள், சற்றே தாமதமாக வந்திருந்தாலும் கூட சீனா சில நம்ப முடியாத எல்லைகளை தொட்டுள்ளது என்றே கூறலாம்.

விண்வெளி நிலையத்தை உருவாக்குவது, அடுத்தடுத்த "நிலவு மாதிரி"களை சேகரிக்க பல விண்வெளி பயணங்களை திட்டமிடுவதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் கிரகத்தில் அதன் முதல் ரோவர் ஆன ஜுராங்-ஐ (Zhurong) "இறக்கி விட்டதும்" இங்கே குறிப்பிடத்தக்கது.

சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!

Zhurong-இன் நிலைப்பாடு என்ன?

Zhurong-இன் நிலைப்பாடு என்ன?

முன்னரே குறிப்பிட்டபடி, ஜுராங் என்பது ஆக்டிவ் ஆக உள்ள 'செவ்வாய் கிரக ரோவர்' ஆகும், இது வேறொரு கிரகத்தில் தரையிறங்கிய சீனாவின் முதல் ரோவர் ஆகும்.

இந்த ரோவர் சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்தால் (China National Space Administration) நடத்தப்பட்ட செவ்வாய் கிரகத்திற்கான தியான்வென்-1 மிஷனின் (Tianwen-1 mission) ஒரு பகுதியாகும்.

இந்த விண்கலம் கடந்த 23 ஜூலை, 2020 அன்று விண்ணில் ஏவப்பட்டது, அது 10 பிப்ரவரி, 2021 அன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்தது!

Photo Courtesy: NASA, Wikipedia.

Best Mobiles in India

English summary
China Vs America Heavy Space Race Pressure on NASA After China Discovers New Lunar mineral on Moon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X