Home
Mobile

Vivo 5ஜி போனுக்கு நம்ப முடியாத ஆஃபர்.. 6500mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் போன்களுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்31 5ஜி (Vivo Y31 5G) ஸ்மார்ட்போனுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.15,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Vivo 5ஜி போனுக்கு நம்ப முடியாத ஆஃபர்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ ஒய்31 5ஜி அம்சங்கள் (Vivo Y31 5G Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உடன் இந்த விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

6.68-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 1608 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன். கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. ஏஐ ஏரேஸ் (AI Erase), சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) போன்ற ஏஐ அடிப்படையிலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் .

விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது.

அதேபோல் IP68 + IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.

Vivo 5ஜி போனுக்கு நம்ப முடியாத ஆஃபர்.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

குறிப்பாக 6500mAh பேட்டரி உடன் விவோ ஒய்31 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த விவோ ஒய்31 5ஜி போன் பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். வைஃபை, புளூடூத் வி4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
vivo Y31 5G with 4GB RAM available at 15 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X