முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி!

|

உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ரேடியோ தொலைநோக்கியானது அலுவல்ரீதியாக வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி 2016ல் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், அதன் பின்னர் பரிசோதனை மற்றும் கட்டமைப்பதற்கு உட்பட்டிருந்தது.

பாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை

பாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை

பாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கி ( FAST - Five-hundred meter Aperture Spherical Telescope) என்பதை குறிக்கிறது. பாஸ்ட்-ன் புனைப்பெயரான தியான்யான் என்பது, "வானத்தின் கண்" அல்லது "சொர்க்கத்தின் கண்"என பொருள்படுகிறது. இது தென்மேற்கு சீனாவின் குய்ஷோவில் இயற்கையான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள்ளது.

பாஸ்ட்-ன் பெயர் துல்லியமானதாக இல்லை

பாஸ்ட்-ன் பெயர் துல்லியமானதாக இல்லை

மற்ற அனைத்து ஆய்வுகளை தவிர, நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றிவரும் பல்சர் எனப்படும் விண்வெளி பொருளை ஆராய்வதே இதன் அறிவியல் குறிக்கோள் ஆகும். அவற்றில் இரண்டை ஃபாஸ்ட் ஏற்கனவே ஆகஸ்ட் 2017ல் கண்டுபிடித்துவிட்டது.

பாஸ்ட்-ன் பெயர் துல்லியமானதாக இல்லை. இது 500 மீட்டர் (1,640 அடி) விட்டம் கொண்டதாக இருந்தாலும், அதில் 300 மீட்டர் மட்டுமே எந்த நேரத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தொலைநோக்கி செயல்பாட்டில் உள்ளது மற்றும் அதை மாற்ற முடியும் என்பதற்காக ஒரு 300 மீட்டர் பகுதி ரிசீவர் மீது கவனம் செலுத்துகிறது.

களத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்களத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்

ட்டமிட்ட அளவிற்கு ஈடாக அல்லது அதைவிட சிறப்பாக

சின்ஹுவாவின் கூற்றுப்படி, பாஸ்ட் தொலைநோக்கியில் இருந்து வரும் அனைத்து தொழில்நுட்ப குறிகாட்டிகளும் திட்டமிட்ட அளவிற்கு ஈடாக அல்லது அதைவிட சிறப்பாக உள்ளன. ஒரு சக்திவாய்ந்த வானொலி தொலைநோக்கியான பாஸ்ட், குறிப்பாக அதன் முதல் இரண்டு ஆண்டுகளில் சில முக்கிய கண்டுபிடிப்புகளை செய்யும் என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.

பாஸ்ட்-ன் அறிவியல் குறிக்கோள்கள்

பாஸ்ட்-ன் அறிவியல் குறிக்கோள்கள்

*பெரிய அளவிலான நடுநிலை ஹைட்ரஜன் கணக்கெடுப்பு

*பல்சர் கண்காணிப்பு

*சர்வதேச மிக நீண்ட பேஸ்லைன் இன்டர்ஃபெரோமெட்ரி (வி.எல்.பி.ஐ) நெட்வொர்க்கை வழிநடத்துவது

*விண்மீன் மூலக்கூறுகளை கண்டறிதல்

*விண்மீன் தொடர்பு சமிக்ஞைகளைக் கண்டறிதல்

*பல்சர் நேர தொடர்

இந்த பாஸ்ட் தொலைநோக்கி சுமார் ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இரண்டு விண்வெளி கணக்கெடுப்புகளையும் நடத்தும். அந்த எல்லா தரவுகளையும் பகுப்பாய்வு செய்ய இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும். இருப்பினும், தொலைநோக்கியின் செயல்பாட்டு அட்டவணையில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமுள்ளதால், எந்தவொரு ஆச்சரியங்களும் தொடரலாம்.

தொலைநோக்கியின் சக்தி

தொலைநோக்கியின் சக்தி

விண்வெளி கணக்கெடுப்புகள் இந்த தொலைநோக்கியின் கண்காணிப்பு நேரத்தின் பாதி பகுதியை எடுத்துக் கொள்ளும் நிலையில், உயிரினங்களுக்கு மிகமுக்கியமானதாக கருதப்படும் காந்தப்புலங்களைக் கொண்ட எக்ஸோபிளானெட்டுகளைத் தேடுவது போன்ற குறிக்கோள்களை அடைய மீதி நேரம் பயன்படும்.

பாஸ்ட் தொலைநோக்கியின் சக்தி ஏற்கனவே வானியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2017 இல் இந்த தொலைநோக்கி இரண்டு புதிய பல்சர்களைக் கண்டுபிடித்ததுள்ள நிலையில், உண்மையில் இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 102 பல்சர்களைக் கண்டுபிடித்ததுள்ளது.

முன்பை விட 50 மடங்கு துல்லியமாக அளவிட அனுமதிக்கிறது

முன்பை விட 50 மடங்கு துல்லியமாக அளவிட அனுமதிக்கிறது

ஒரே காலகட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மொத்த பல்சர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்று ஜின்ஹுவா அதன் செய்திக்குறிப்பில் மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளது .

பாஸ்ட்-ன் உணர்திறன் பல்சர்களின் நேரத்தை முன்பை விட 50 மடங்கு துல்லியமாக அளவிட அனுமதிக்கிறது. இதன்மூலம் ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட நானோஹெர்ட்ஸ் ஈர்ப்பு அலைகளை அளவிட முடியும்.


வானத்தை கண்காணிப்பதை பொறுத்தவரை, வானொலி வானியலுக்கு பாஸ்ட் ஒரு முக்கிம படியாகும். ரேடியோ தொலைநோக்கிகள் திறம்பட ஆராயக்கூடிய விண்வெளி வரம்பின் அளவை விட இது நான்கு மடங்கு விரிவடைந்துள்ளது.

விஞ்ஞானி லி கெஜியா

விஞ்ஞானி லி கெஜியா

இது ஒரு பாய்ச்சல், இதன் பொருள் "விஞ்ஞானிகள் இன்னும் அறியப்படாத நட்சத்திரங்கள், அண்ட நிகழ்வுகள் மற்றும் பிரபஞ்சத்தின் விதிகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும், அல்லது வேற்று கிரக வாழ்க்கையையும் கண்டறிய முடியும்" என்று பீக்கிங் பல்கலைக்கழகத்தின் காவ்லி இன்ஸ்டிடியூட் ஆப் வானியல் மற்றும் வானியற்பியல் விஞ்ஞானி லி கெஜியா கூறியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
China's Absolutely Massive Radio Telescope FAST Is Now Fully Operational : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X