Home
Mobile

ப்பா என்னா காம்பினேஷன்.. 16GB ரேம், 1TB மெமரி, 8600mAh பேட்டரி.. ஏப்.28-ல் புது OnePlus போன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அடுத்த அடுத்த வாரம் சீனாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அது ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா (OnePlus Ace 6 Ultra) மாடல் ஆகும். இந்தியாவில் இது, ஏதேனும் ஒரு நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆக ரீபிராண்டட் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள், ஒரு பெஞ்ச்மார்க்கிங் இணையதளம் வழியாக காணப்பட்டுள்ளது. சுவாரசியமாக குறிப்பிட்ட லிஸ்டிங் ஆனது ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவின் சில உள் பாகங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் பெயரையும் உறுதிப்படுத்துகிறது.

16GB ரேம், 1TB மெமரி, 8600mAh பேட்டரி.. ஏப்.28-ல் புது OnePlus போன்!

மாடல் நம்பர், மாடல் பெயர்: டிப்ஸ்டர் @ZionsAnvin வழியாக கிடைத்துள்ள தகவலின் படி - PMB110 என்கிற மாடல் நம்பரை கொண்ட ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் கீக்பெஞ்சில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த மாடல் நம்பர், ஒன்பிளஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவை உறுதிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

சிப்செட்: கீக்பெஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ள கோர் உள்ளமைப்பை சந்தையில் கிடைக்கும் சிப்செட்களுடன் ஒப்பிடும்போது, ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) கொண்டு இயங்கும் என்பது தெரியவருகிறது. இதே சிப்செட் தான் ஒப்போ ஃபைண்ட் X9 (Oppo Find X9) மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ (Find X9 Pro) போன்ற ஸ்மார்ட்போன்களில் உள்ளது.

ரேம்: ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது தோராயமாக 14.94GB ரேம் உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது 16GB என சந்தைப்படுத்தப்படலாம். இதோடு சேர்த்து 12GB+256GB, 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB, மற்றும் 16GB+1TB ஆகிய ரேம் மற்றும் இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் இது அறிமுகம் செய்யப்படலாம் என்று குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார்.

ஓஎஸ் மற்றும் பேட்டரி: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டு இயங்குவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ஆக்சிஜன்ஓஎஸ் 16 உடன் வெளியிடப்படலாம். கடைசியாக முன்னதாக வெளியான தகவலின்படி இது 8,500mAh பேட்டரிக்கு பதிலாக, 8,600mAh பேட்டரி உடன் வரும் என்றும் டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

எப்போது அறிமுகம்? ஒன்பிளஸ் ஏஸ் 6 அல்ட்ராவின் வெளியீடு, சீனாவில் உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 28 அன்று இரவு 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) நடைபெற உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த ஸ்மார்ட்போன் இந்திய வேரியண்ட் ஆனது, சீனாவில் அறிமுகமான சீன வேரியண்ட்டில் உள்ள அதே அம்சங்களுடன், நோர்ட் சீரீஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இப்போதைக்கு அதை 100% உறுதி செய்ய முடியாது; மேலும் மாடல் பெயரையும் கணிக்க முடியாது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் இந்திய அறிமுகம்: ஒன்பிளஸ் நிறுவனம், அதன் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மற்றும் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் என மேலும் இரண்டு போன்களுடன் தனது நார்ட் 6 சீரீஸை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.

இந்த இரண்டு போன்களும் விலை மற்றும் வன்பொருள் அடிப்படையில் முன்னதாக அறிமுகமான நார்ட் 6 மாடலுக்கு கீழே இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான அனுபவத்தையே வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 மற்றும் சிஇ 6 லைட் ஆகிய 2 ஸ்மார்ட்போன்களு வருகிற மே 7 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாக உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Ace 6 Ultra Tipped to Pack Dimensity 9500 16GB RAM Android 16 8600mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X