முன்பதிவு இல்லாமல் விற்பனைக்கு வந்தது யு யுஃபோரியா..!

Written By:

யு டெலிவென்ச்சர்ஸ் நிறுவனம் யு யுஃபோரியா கருவிகளை முன்பதிவு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கின்றது. அதன் படி யு யுஃபோரியா கருவிகளை இன்று துவங்கி ஜூலை மாதம் 23 ஆம் தேதி வரை முன்பதிவு இல்லாமல் வாங்க முடியும்.

 முன்பதிவு இல்லாமல் விற்பனைக்கு வந்தது யு யுஃபோரியா..!

இந்த கருவிகள் அனைத்திலும் மேக் இன் இந்தியா முத்திரை பதிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சைனோஜன் ஓஎஸ் கொண்டிருக்கும் இந்த கருவியில் 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 720*1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டிருக்கின்றது. மெட்டல் ஃப்ரேம் கொண்டிருக்கும் இந்த கருவியின் விலை ரூ.6,999.

ஆண்ட்ராய்டு லாலிபாப் சேர்ந்த சைனோஜன் ஓஎஸ் 12 கொண்டிருக்கும் இந்த கருவியில் வாடிக்கையாளர்கள் ட்ரூகாலர் போன்ற டயலரையும் எதிர்பார்க்கலாம். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டிருக்கும் இந்த கருவியில் ப்ளூடூத் மற்றும் 4ஜி எல்டிஈ போன்ற சேவைகளும் இருக்கின்றது.

 

Read more about:
English summary
Yu Televentures is all set to sell its affordable Yu Yuphoria handsets in an open sale model from today to 23 July.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot