மொத்த மார்கெட் அதிருது.. 7000mAh பேட்டரி, IP69K ரேட்டிங்.. 50MP அல்ட்ரா வைடு செல்பீ.. AI பாப்அவுட்.. மாடல்?
இந்திய கேமரா பிரியர்கள் மற்றும் ரக்கட் ஸ்மார்ட்போனை விரும்பும் பிரியர்களுக்கு ஏற்ற பீச்சர்களுடன் ஓப்போ எப்33 ப்ரோ 5ஜி (OPPO F33 Pro 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப அதிக பேக்கப் கொடுக்கும்படி 7000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஓப்போ எப்33 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் டியூரபிலிட்டி கொண்ட மாடலாக இந்த ஓப்போ எப்33 ப்ரோ 5ஜி இருக்கிறது. டிராப் புரொடெக்சன் கொடுக்கும்படியான டிசைன் மட்டுமல்லாமல், 360 டிகிரியில் ஆர்மர் பாடியை கொடுத்து உள்ளது. இதுபோக ஷாக் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும் MIL-STD-810H சர்டிபிகேஷனை கொண்டுள்ளது. அண்டர்வாட்டர் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி செய்து கொள்ளலாம்.

ஏனென்றால், டாப்-லெவல் வாட்டர் ப்ரூப் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் மட்டுமல்லாமல், IP69K ரேட்டிங்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, பிரீமியம் லெவல் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. கலர்ஓஎஸ் 16 வழியாக லுமினஸ் ரெண்டரிங் என்ஜின் (Luminous Rendering Engine) கிடைக்கிறது.
அக்வா டைனாமிக்ஸ் (Aqua Dynamics), ஏஐ ரைட்டர் (AI Writer), குயிக் ஸ்விட்ச் பார் (Quick Switch Bar) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 4289எம்எம் விசி கூலிங் சிஸ்டம் மற்றும் எஸ்ஜிஎஸ் ஹை-டெம்ப்ரேச்சர் ப்ளூயன்சி சர்டிபிகேஷன் கொடுத்து உள்ளது. வழக்கமான ஏஐ லிங்க் பூஸ்ட் 3.0 (AI Linkboost 3.0) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களும கொடுக்கப்பட்டு உள்ளன.
ஓப்போ எப்33 ப்ரோ 5ஜி அம்சங்கள் (OPPO F33 Pro 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6360 MAX 6nm) சிப்செட் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.
7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 194 கிராம் எடை மற்றும் 8.3 எம்எம் தடிமன் கொடுத்து உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மோனோகுரோம் கேமரா + 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,999ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) தளத்தில் இருந்து ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். ஓப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோரிலும் ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ள கிடைக்கிறது.
எஸ்பிஐ, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற முன்னணி பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு ஜீரோ டவுன் பேமெண்ட் மற்றும் 10 சதவீத யுபிஐ கேஷ்பேக் கிடைக்கிறது. மிஸ்டிஃபாரஸ்ட் (Misty Forest), பேஷன் ரெட் (Passion Red) மற்றும் ஸ்டார்ரி ப்ளூ (Starry Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








