ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யம் மிரளுது.. 8500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 50MP கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஒன்பிளஸ் (OnePlus) பிரியர்களும் மிரளும்படியான பீச்சர்களுடன் ஒன்பிளஸ் ஏஸ்6 அல்ட்ரா (OnePlus Ace6 Ultra) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் வெளியீடு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. பேட்டரி, சிப்செட், கேமரா, டிஸ்பிளே பீச்சர்கள் கசிந்துள்ளன.
ஒன்பிளஸ் ஏஸ்6 (OnePlus Ace6) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தப்படியாக ஏஸ் அவேக்கிங் (Ace Awakening) என்னும் லேபிளில் ஒன்பிளஸ் ஏஸ்6 அல்ட்ரா வெளியாக இருக்கிறது. டிசைனுடன் ஏப்ரலில் வெளியாக இருப்பதை, ஒன்பிளஸ் சீனா நிறுவனம் உறுதி செய்துள்ளது. டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை.

ஆனால், பேக் பேனலில் அப்கிரேட் கிடைக்கிறது. 3டி ஸ்டீரியோஸ்கோபிங் லித்தோகிராபி (3D Stereoscopic Lithography) கிடைக்கிறது. பேக் பேனில் கிளிட்டரிங் அவுட்புட் எதிர்பார்க்கலாம். மேலும், மெட்டல் கியூப் டெகோ (Metal Cube Deco) கிடைக்கிறது. ஹீட்-இன்சுலேட்டிங் மெட்டல் ஃபிரேம் (Heat-Insulating Metal Frame) கிடைக்கிறது.
இந்த டிசைன் மட்டமே உறுதி செய்யப்பட்டு உள்ளன. மற்ற பீச்சர்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மார்கெட்டில் கேமரா, டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட் உள்ளிட்ட முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) எக்ஸ் தளத்தில் இந்த பீச்சர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரிய பேட்டரி மாடலாக இருக்கிறது.
ஒன்பிளஸ் ஏஸ்6 அல்ட்ரா அம்சங்கள் (OnePlus Ace6 Ultra Specifications): 6.78 இன்ச் எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் ஏஸ்6 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெட் டைமன்சிட்டி 9500 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 9500 SoC) கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டுள்ளது. ஏஸ் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் டூயல் ரியர் கேமரா செட்டப் கிடைக்கிறது. ஆகவே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ஒன்பிளஸ் ஏஸ்6 அல்ட்ரா கொண்டுள்ளது.
100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8500mAh பேட்டரி கிடைக்கிறது. மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் கஸ்டமைசபிள் பிளஸ் கீ (Plus Key) கிடைக்கிறது. சீன மார்கெட்டில் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு பிறகு குளோபல் மார்கெட்டில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்படும். பட்ஜெட்டை பார்க்க முந்தைய மாடலை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒன்பிளஸ் ஏஸ்5 அல்ட்ரா (OnePlus Ace 5 Ultra) கடந்த மார்ச் மாதமே வெளியாகிவிட்டது. ஆனால், ஒன்பிளஸ் ஏஸ்6 அல்ட்ரா கட்டாயம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும். சீன மார்கெட்டில் ரூ.30,000 பட்ஜெட்டில் ஒன்பிளஸ் ஏஸ்5 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஆகவ, ரூ.34,000 முதல் ரூ.36,000 வரையில் ஒன்பிளஸ் ஏஸ்6 அல்ட்ரா மாடலின் விலை இருக்கலாம்.
ஒன்பிளஸ் ஏஸ்5 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6700mAh பேட்டரி, 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்தது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் 6என்எம் (Octa-Core Dimensity 9400+ 3nm) சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின், 8 எம்பி அல்ட்ரா வைடு, 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








