அடிச்சு தூக்குது விற்பனை.. வெறும் ரூ.12,813 க்கு 6000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போன் இன்று வெளியாக இருக்கிறது. முந்தைய மாடலான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme NARZO 80 Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. பிரீமியம் லுக்கில் 6000mAh பேட்டரி, 15W சார்ஜிங், 120Hz டிஸ்பிளேவை கொடுக்கிறது. டியூரபிலிட்டி பீச்சர்களிலும் மிரளவிட்டு இருக்கிறது.
இந்திய மார்கெட்டில் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலானது, இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாக இருக்கிறது. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே போன்ற ஹைலைட் பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. ஏர்ப்ளோவ் விசி கூலிங் சிஸ்டம் மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300) கொடுக்கப்பட உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை தொடர்ந்து, முந்தைய மாடலான ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. சொல்லப்போனால், ஒரு வருடம் பழைய மாடலாக இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி இருக்கிறது. ஆனால், இதில் கொடுக்கப்பட்ட அதே சிப்செட்டே ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்க உள்ளது.
ஆகவே, பர்ஃபாமென்ஸ் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆனால், பேட்டரி கேபாசிட்டியில் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி மாடலானது 7000mAh கொடுக்கிறது. ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி மாடலில் 6000mAh மட்டுமே கிடைக்கிறது. அதேபோல ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி டிசைனில் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. கேமரா டிசைன் மற்றும் பீச்சர்களில் மாற்றமில்லை.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 3 சதவீத தள்ளுபடி போக 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,488 விலைக்கு விற்பனைக்கு வருகிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.675 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,813 விலைக்கு இந்த நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 80 Lite 5G Specifications): 6.67 இன்ச் (1604 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் பெற்று கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.
ரியல்மி யுஐ 3.0 (realme UI 3.0) கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (6nm Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கிடைக்கிறது. 32 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை இந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. கேலக்ஸிகோர் ஜிசி32ஈ2 (GALAXYCORE GC32E2) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இன்று வெளியாக இருக்கும் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி போனில் 13 எம்பி மெயின் கேமரா மட்டுமே உள்ளது. டைப்-சி சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. IP64 ரேட்டிங் மற்றும் MIL-STD 810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது. கிரிஸ்டல் பர்பிள், ஓனிக்ஸ் பிளாக் கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








