Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஓப்போ ஏ6எஸ் ப்ரோ (OPPO A6s Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பேக் பேனலில் 3டி டெப்த்-ஆஃப்-பீல்டு லைட் சென்சிங் டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த ஓப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் நாளை (ஏப்ரல் 15) ஓப்போ எப்33 ப்ரோ (OPPO F33 Pro) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது, ஓப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெர்ஷாக இருக்கிறது. இப்போது, ஓப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியாகிவிட்டது. ஆகவே, அந்த போனின் பீச்சர்கள், விலை விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 7000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. மாடல்?

ஓப்போ ஏ6எஸ் ப்ரோ அம்சங்கள் (OPPO A6s Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6360 மேக்ஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6360 MAX 6nm) சிப்செட்டை இந்த ஓப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைத்துள்ளது.

மேலும், கலர்ஓஎஸ் 16.0 (ColorOS 16.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியல் கேமரா சிஸ்டம் மற்றும் 16 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. MIL-STD-810H சர்டிபிகேஷனுடன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி மட்டுமல்லாமல், IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோக IP69K ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 7000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ஓப்போ ஏ6எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.29 எம்எம் தடிமன் மற்றும் 194 கிராம் எடை கொடுத்து உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளது.

மிட்-ரேஞ்ச் மாடலாக இருப்பதால், இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 30,008ஆகவும், 8 ஜிபி ரேம் + 56 ஜிபி மெமரி வேரியண்ட்டின் ரூ.32,737ஆகவும் இருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,827ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.40,914ஆகவும் இருக்கிறது. வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி முதல் சீன விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்தியாவில் ஓப்போ எப்33 ப்ரோ மாடலாக வெளியாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO A6s Pro With 7000mAh Battery Launched in China Sale From April 17 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X