OPPO போட்ட போடு.. 7000mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. 360 டிகிரி ஆர்மர் பாடி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கும் ஓப்போ எப்33 5ஜி சீரிஸ் (OPPO F33 5G Series) மாடல்களின் விலை மற்றும் விற்பனை தேதி குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் வெளியாக இருப்பது தெரிகிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப டியூரபிலிட்டி கொண்ட பாடி மற்றும் பீச்சர்களையும் பார்க்க முடிகிறது. இந்த ஓப்போ எப்33 5ஜி சீரிஸ் மாடல்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
நாளை (ஏப்ரல் 15) இந்த ஓப்போ எப்33 5ஜி சீரிஸ் வெளியாக இருக்கின்றன. இதில் ஓப்போ எப்33 5ஜி (OPPO F33 5G) மற்றும் ஓப்போ எப்33 ப்ரோ 5ஜி (OPPO F33 Pro 5G) ஆகிய மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. இந்த மாடல்களின் பேட்டரி, கேமரா, டியூரபிலிட்டி மற்றும் டிசைன் உள்ளிட்ட விவரங்கள் பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியா தளங்களில் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இந்த நேரத்தில் டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் அவரது எக்ஸ் தளத்தில் இந்த மாடல்களின் ரேம், மெமரி மட்டுமல்லாமல், பட்ஜெட் ரேஞ்ச் மற்றும் விற்பனை தேதிகளை பதிவிட்டுள்ளார். இதில் மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டை குறிப்பிட்டுள்ளார். இந்த விலை, விற்பனை தேதி விவரங்களை பார்த்துவிட்டு, பிறகு பீச்சர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ எப்33 5ஜி விலை (OPPO F33 5G Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.30,000 முதல் ரூ.32,000 பட்ஜெட் வரையில் இருக்கும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.35,000 முதல் ரூ.36,000 வரையில் இருக்கும். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,000 முதல் ரூ.39,000 வரையில் இருக்கும்.
ஓப்போ எப்33 ப்ரோ 5ஜி விலை (OPPO F33 Pro 5G Price): 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,000 முதல் ரூ.39,000 வரையில் இருக்கும். 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.41,000 முதல் ரூ.42,000 வரையில் இருக்கும். ஏப்ரல் 22ஆம் தேதி முதல் இந்த எப்33 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
அதேபோல ஓப்போ எப்33 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த விலை மற்றும் விற்பனை தேதிகளே சுதான்ஷு அம்போரின் எக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, இந்த ஓப்போ எப்33 5ஜி சீரிஸ் மாடல்களின் பீச்சர்கள் வெளியாகிவிட்டன. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ எப்33 5ஜி சீரிஸ் அம்சங்கள் (OPPO F33 5G Series Specifications): ஆட்டோ வைடு ஸ்விட்ச் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமராவை கொடுத்து உள்ளது. இந்த கேமராவுக்கு ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ், ஏஐ எரைசர் 2.0 மற்றும் ஏஐ பாப்அவுட் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது.
4289எம்எம் விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) கொண்டுள்ளது. IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மற்றும் 360 டிகிரி ஆர்மர் பாடி கிடைக்கிறது. ஸ்டார்ரி சீ லென்ஸ் மாடியூல் டிசைன் கொண்டுள்ளது. 6.57 இன்ச் டிஸ்பிளே மற்றும் 194 கிராம் எடை கிடைக்கிறது. ஏப்ரல் 15ஆம் தேதி விலை மற்றும் விற்பனை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.


Click it and Unblock the Notifications








