கண் இமைக்குள் அனைத்தும்: சியோமியின் வியக்கத்தக்க ஸ்மார்ட் கிளாஸ்- எதிர்காலம் இப்படிதான்!

|

சியோமி நாளை செப்டம்பர் 15 ஆம் பெரிய நிகழ்வு ஒன்றை ஒருங்கிணைக்க இருக்கிறது. இதில் புதிய தொலைபேசிகள், டேப்லட் உள்ளிட்டவைகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழ்வில் நிறுவனம் எதை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கும் நிலையில் தற்போது எதிர்பார்க்காத வியக்கத்தக்க புதிய சாதனம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

சியோமி ஸ்மார்ட் கிளாஸ்

சியோமி ஸ்மார்ட் கிளாஸ்

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் சியோமி ஸ்மார்ட் கிளாஸ் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னேறி எதிர்காலத்திற்கு ஏற்ப பொறியியலாளரில் பார்வை என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதன் ஷிப்பிங் தேதி மற்றும் விலை குறித்த எந்த தகவலும் இல்லை.

51 கிராம் எடையுள்ள ஸ்மார்ட் கிளாஸ்

51 கிராம் எடையுள்ள ஸ்மார்ட் கிளாஸ்

சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் 51 கிராம் எடையுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் தங்களுக்கான அறிவிப்புகளை காட்டவும், அழைப்புகளை மேற்கொள்ளவும் பயன்படும். அதுமட்டுமின்றி புகைப்படங்களை எடுக்கவும், நிகழ் நேரத்தில் மொழி மாற்றம் செய்யவும் அனுமதிக்கிறது. இது அனைத்தும் கண்ணில் பார்த்தப்படியே செய்வது என்பது மிகவும் ஆகச்சிறந்த அம்சம் ஆகும்.

மைக்ரோ எல்இடிகள்

மைக்ரோ எல்இடிகள்

இதன் டிஸ்ப்ளேவில் பின்ஒளியை காண்பிக்க மைக்ரோ எல்இடிகள் பயன்படுத்தப்படுகின்றன. 2.4 எம்எம் மற்றும் 2.02 எம்எம் அளவில் இதன் டிஸ்ப்ளே இருக்கும் அதாவது ஒரு அரிசியின் அளவு என கூறப்படுகிறது. தனிப்பட்ட பிக்சல்கள் 4μm அளவில் இருக்கும். நுணுக்கமான மோனோக்ரோம் பேனல் உடன் வருகிறது. இதில் நிறங்கள் எதிர்பார்க்க முடியாது என கூறப்படுகிறது. 2 மில்லியன் நிட்ஸ் பிரகாசத்தை எதிர்கொள்ளலாம் இந்த கண்ணாடியின் மூலம். இது நேரடியாக சூரிய ஒளியை காண்பதற்கு சமம்.

ஒளியியல் ஃபில்டர் தொழில்நுட்பம்

மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளே ஒளியியல் ஃபில்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது 180 டிகிரி ஒளியை பிரதிபலிக்கிறது. இது துல்லியமாக மனித கண்ணுக்கு ஒளியை காண்பிக்கிறது. கண்ணாடி லென்ஸ்-ன் உட்புற மேற்பரப்பில் பொறிக்கப்பட்டுள்ள கிராட்டிங் அமைப்பு, ஒளியை தனித்துவமான முறையில் ஒளிவிலகல் செய்ய அனுமதிக்கிறது. இதன்மூலம் எண்ணற்ற முறை ஒளியை அனுபவித்து முழுமையான படத்தை பார்க்க அனுமதிக்கிறது. இது அனைத்தும் ஒரே லென்ஸில் அனுமதிக்கப்படுகின்றன.

XiaoAI உதவியாளர் அம்சம்

XiaoAI உதவியாளர் அம்சம்

இதன் முதன்மை தொடர்பு முறையானது XiaoAI உதவியாளர் அம்சமாகும். இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் முக்கியமான அறிவிப்புகளை மட்டுமே பெற அனுமதிக்கிறது. இதையடுத்து தொலைபேசி செயல்படும் ஒவ்வொரு அறிவிப்புக்கும் உங்களை தொந்தரவு செய்யாது. ஸ்மார்ட் ஹோம் அலாரம், அலுவலக பயன்பாடுகளுக்கான அவசர தகவல்கள், முக்கிய தொடர்பு செய்திகள் உள்ளிட்டவைகளை மட்டுமே அணுக இந்த அம்சம் அனுமதிக்கும்.

இரட்டை பீம்ஃபார்மிங் மைக்ஸ்

இந்த கண்ணாடிகள் உள்ளமைக்கப்பட்ட இரட்டை பீம்ஃபார்மிங் மைக்ஸ், ஸ்பீக்கர்களை கொண்டிருக்கின்றன. இவைகள் மூலம் நீங்கள் அழைப்புகளை எடுக்க அனுமதிக்கும். அதேபோல் இதன் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. ஸ்மார்ட் கிளாஸ்கள் சிறந்த அம்சத்தில் ஒன்று ஆடியோவை உரையுடன் நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம்.

குவாட் கோர் ஏஆர்எம் செயலி

குவாட் கோர் ஏஆர்எம் செயலி

அனைத்து செயல்பாடுகளையும் செயல்படுத்த, ஸ்மார்ட் கிளாஸ்களில் குவாட் கோர் ஏஆர்எம் செயலி, பேட்டரி, டச் பேட், வைஃபை, ப்ளூடூத் தொகுதிகள் மற்றும் ஆண்ட்ராய்டு மென்பொருள் அனுபவம் உள்ளிட்டவைகளுடன் வரும் என கூறப்படுகிறது.

எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும்

எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும்

தற்போது வெளியான தகவல்களின் அடிப்படையில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி ஸ்மார்ட் கிளாஸ்களில் மாஸ் மார்க்கெட் தயாரிப்பாக இருக்கிறது. எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் அட்வான்ஸ் அம்சங்களோடு இது இருக்கும் எனவும் இதன் இறுதி மற்றும் முழு அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Announced its Smart Glasses With Displaying Messages, capturing Photos, making Calls and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X