பலே POCO.. தட்டி தூக்கும் விலையில் 9000mAh பேட்டரி, 100W சார்ஜிங், Light Hunter கேமரா.. மார்ச் 17 முதல் இதான்!
போக்கோ (POCO) நிறுவனம், இந்திய சந்தையில் அதன் அடித்த எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்நிறுவனம் நாளை (மார்ச் 17) மாலை 5.30 மணிக்கு, போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது
இந்த சீரீஸின் கீழ் - உயர்நிலை செயல்திறன் மற்றும் விரைவான கேமிங் திறன்களை வழங்குவதில் பெரிதும் கவனம் செலுத்தும் - போக்கோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவ்விரு மாடல்களும் என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோவின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம்: எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் பகிர்ந்துள்ள விவரங்களின்படி போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,000 முதல் தொடங்கலாம். மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலானது ரூ.42,000 முதல் என்கிற விலைக்கு விற்கப்படலாம்.
லீக் ஆன விலை விவரங்களை வைத்து பார்க்கும் போது, டிமென்சிட்டி 9500எஸ் சிப்செட் கொண்டு இயங்கும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடலானது, இந்தியாவில் ரூ.44,999 க்கு விற்கப்படும் ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மாடலுடன் நேரடியாக போட்டியிடக்கூடும். இந்த ஐக்யூ போன் ஆனது "ஒப்பீட்டளவில்" சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டை கொண்டுள்ளது.
மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) ஆகிய மாடல்களுடன் போட்டியிடலாம். இவைகள் ரூ.35,000 பட்ஜெட்டில் திறமையான ஸ்னாப்டிராகன் சிப்செட்கள் மற்றும் 7,000mAh வரையிலான பேட்டரிகளை பேக் செய்கின்றன.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் டிசைன்: வடிவமைப்பை பொறுத்தவரை இந்த சீரீஸ் பிளாட் ஆன ரியர் பேனலை கொண்டிருப்பதாக டீஸ் செய்யப்படுகிறது. இந்த சீரீஸ் செங்குத்தான பில் ஷேப்ட்டு கேமரா மாட்யூலை கொண்டுள்ளது. அதில் இரண்டு கேமரா லென்ஸ்கள், டூயல் எல்இடி ஃபிளாஷ் உள்ளது. வலது பக்கத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்கள் உள்ளன
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் டிஸ்பிளே: டிஸ்பிளேவை பொறுத்தவரை ப்ரோ மேக்ஸ் மாடலானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5K OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மாடல் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான சற்று சிறிய 6.59-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் சிப்செட்: ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது 3என்எம் ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9500எஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் உடன் வரும்.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் கேமராக்கள்: இரண்டுமே டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். ப்ரோ மேக்ஸ் மாடலில் லைட் ஹண்டர் 600 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், ப்ரோ மாடலில் OIS உடன் 50 மெகாபிக்சல் சோனி IMX882 கேமரா பேக் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கேமராவை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஆகிய இரண்டுமே 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவுடன் வருமென்று கூறப்படுகிறது. மேலும் முன்பக்கத்திலும் ஒரே மாதிரியான செல்பீ கேமரா இடம்பெறலாம் - 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் பேட்டரி: போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 9000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது ஒரே சார்ஜில் - மிதமான பயன்பாட்டுடன் 3 நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப், 18 நாட்களுக்கு மேல் ஸ்டேண்ட்பை அல்லது ஒரே சார்ஜில் சுமார் 30 மணிநேர ஆன்லைன் வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று கூறப்படுகிறது.
மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6500mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது ஒரே சார்ஜில் - மிதமான பயன்பாட்டுடன் 2 நாட்களுக்கு மேல் பேட்டரி பேக்கப், 12 நாட்களுக்கு மேல் ஸ்டேண்ட்பை அல்லது சுமார் 18 மணிநேர ஆன்லைன் வீடியோ பிளேபேக்கை வழங்கும் என்று கூறப்படுகிறது.கடைசியாக இரண்டு ஸ்மார்ட்போன்களுமே PPS சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்குடன் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.


Click it and Unblock the Notifications








