Home
Mobile

OnePlus-ன் குட்டி போன் மீது பெரிய விலை குறைப்பு.. 12GB ரேம், 80W சார்ஜிங், 5850mAh பேட்டரி!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது அதன் அடுத்த பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன்கள் ஆன ஒன்பிளஸ் நோர்ட 6 சீரீஸின் இந்திய அறிமுகத்தை டீஸ் செய்ய தொடங்கி உள்ளது. இதன் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 (OnePlus Nord CE 6) என்கிற 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாடல்களின் வருகையால் முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) விலைகள் குறைந்துள்ளதா என்று பார்த்தால்.. அப்டி எதுவும் நடக்கவில்லை. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஆனது இன்னமும் அதன் அறிமுக விலையான ரூ.24,999 க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.

OnePlus-ன் குட்டி போன் மீது பெரிய விலை குறைப்பு!

ஒன்பிளஸ் நோர்ட் 5 மாடலின் விலை இன்னும் மோசம். அது அறிமுக விலையான ரூ.31,999 க்கு பதிலாக ரூ.2000 விலை உயர்த்தப்பட்டு ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக இந்தியாவிற்கு வரும் புதிய ஒன்பிளஸ் நோர்ட் 6 சீரீஸ் மாடல்கள் பழைய மாடல்களின் விலைகளை பாதிக்கவில்லை. ஆனால் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் 15டி மாடலானது இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒன்பிளஸ் 13எஸ் மாடலின் விலையை குறைத்துள்ளது.

சீனாவில், ஒன்பிளஸ் 15டி இம்மாதத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏனென்றால் "அங்கே" ஒன்பிளஸ் 13டி ஆக அறிமுகமான மாடல் தான் "இங்கே" ஒன்பிளஸ் 13எஸ் ஆக வந்தது. இதற்கிடையில் ஒன்பிளஸ் 15டி மாடலின் அறிமுகம் ஒன்பிளஸ் 15எஸ் வருவதற்கு முன்பே ஒன்பிளஸ் 13எஸ் மாடலின் விலை குறைத்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் இந்தியாவில் ரூ.54,999 க்கு அறிமுகமானது. ஆனால் தற்போது ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.4000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.50,999 க்கு விற்பனை செய்யபடுகிறது. இதே விலை அமேசான் இந்தியா வலைத்தளத்திலும் பிரதிபலிக்கிறது.

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் ரேட்
- ஆக்வா டச் 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)

- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஆக்சிஜன் 15 ஓஎஸ்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)

- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, நாவிக் உடன் கூடிய ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
- எடையில் 185 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 13s Price Dropped in India Selling For Rs 50999 Instead of Rs 54999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X