Home
News

ரூ.5 லட்சம், ஆட்டோ க்ளைம், அக்கவுண்ட் டிரான்ஸ்பர்.. EPFO 3.0-ஆல் வந்த 3 முக்கிய மாற்றங்களும், விளைவுகளும்!

இபிஎப்ஓ 3.0 (EPFO 3.0) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முக்கிய மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை மக்களவையில் இந்திய அரசு பகிர்ந்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் ஆன ஷோபா கரண்ட்லாஜே இபிஎப்ஓ 3.0 திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட முக்கிய 3 மாற்றங்களை விளக்கினார்.

1. சிபிபிஎஸ் (CPPS): சிபிபிஎஸ் என்பது சென்ட்ரலைஸ்டு பென்சன் பேமண்ட் சிஸ்டம் (Centralised Pension Payments System) என்பதின் சுருக்கமாகும். ஜனவரி 1, 2025 நிலவரப்படி, அனைத்து இபிஎப்ஓ ​​கள அலுவலகங்களும், சென்ட்ரலைஸ்டு பென்சன் பேமண்ட் சிஸ்டம் மாட்யூல் (CPPS Module) ஆனது ழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளன என்று கரண்ட்லாஜே கூறியுள்ளார். மையப்படுத்தப்பட்ட பணமளிப்பு முறையை நிறுவுவதன் மூலம், சிபிபிஎஸ் ஆனது ஒவ்வொரு மாதமும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு பலன்களை வழங்குகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

EPFO 3.0-ஆல் வந்த 3 முக்கிய மாற்றங்களும், விளைவுகளும்!

2. இபிஎப் (EPF): இபிஎப் ஆட்டோ க்ளைம் செட்டில்மென்ட் குறித்து பேசுகையில், நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி 25, 2026 வரை, ரூ.5 லட்சம் வரையிலான 3,52,20,199 கோரிக்கைகள் தானியங்கி முறையில் தீர்க்கப்பட்டுள்ளன என்று கரண்ட்லாஜே கூறியுள்ளார். தானியங்கி கோரிக்கை தீர்வு முறையானது, கோரிக்கை தீர்வு திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்றும், நடப்பு நிதியாண்டில் மொத்த முன்பண கோரிக்கைகளில் 71.37% தானியங்கி முறையில் தீர்க்கப்பட்டு, சுமார் ரூ.51,620 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் கரண்ட்லாஜே கூறியுள்ளார்.

3. இபிஎஃப் கணக்கு மாற்றம் (Transfer of EPF account): வேலை மாற்றத்தின் காரணமாக இபிஎஃப் கணக்குகளை மாற்றும் செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ள நிலையில், 2026 பிப்ரவரி 25 ஆம் தேதி நிலவரப்படி, ஊழியர்கள் மற்றும் முதலாளிகளின் தலையீடு இன்றி மொத்தம் 70,54,895 தானியங்கி பரிமாற்ற கோரிக்கைகள் தானாகவே செயல்படுத்தப்பட்டன என்று அமைச்சர் கரண்ட்லாஜே தெரிவித்துள்ளார்

இந்த முயற்சி, மெம்பர்கள் பரிமாற்ற கோரிக்கைகளை கைமுறையாக தாக்கல் செய்ய வேண்டிய தேவையை நீக்குகிறது மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முதலாளி மூலம் கோரிக்கையை அனுப்ப வேண்டிய தேவையையும் நீக்குகிறது. மேலும், கேஒய்சி இணக்கமான அக்கவுண்ட்களில் பரிமாற்ற கோரிக்கைகளுக்கு முந்தைய அல்லது தற்போதைய முதலாளியின் ஒப்புதல் தேவை என்பதும் நீக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25, 2026 நிலவரப்படி, 21,39,247 பரிமாற்றக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இபிஎப்ஓ 3.0 என்றால் என்ன? இபிஎப்ஓ 3.0 என்பது இபிஎப்ஓ-வின் ஒரு குறிப்பிடத்தக்க டிஜிட்டல் மாற்ற முயற்சியாகும், இது சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முயற்சி செயல்முறைகளை நெறிப்படுத்தவும், பேப்பர் வொர்க்களை குறைக்கவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது உறுப்பினர்கள் தங்கள் சோஷியல் செக்யூரிட்டி அக்கவுண்ட்களை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது, கோரிக்கைகளை விரைவாக செயல்படுத்த உதவுகிறது மற்றும் அனைத்து உறுப்பினர் சேவைகளையும் ஒரே ஒருங்கிணைந்த தளத்திலிருந்து நிர்வகிக்க வழிவகுக்கிறது. இடர் மேலாண்மைக்கான சோதனைகள் மற்றும் சரிபார்ப்புகளில் தேர்ச்சி பெறும் கோரிக்கைகள், கைமுறை தலையீடு இல்லாமல் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கைமுறையாக தீர்வு காண்பதற்கு ஆகும் நேரம் 20 நாட்கள் வரை என்பதிலிருந்து 3 நாட்களுக்கும் குறைவு என்கிற அளவிற்கு குறைக்கப்படுகிறது.

பிபிஎப் தொடர்பான மார்ச் 31 காலக்கெடு: செல்வ மகள் திட்டம் (Selva Magal Thittam) அதாவது எஸ்எஸ்ஒய் (SSY) என்கிற சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திட்டம் அல்லது பிபிஎப் (PPF) என்கிற பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் ஒரு அத்தியாவசிய நிதி பரிவர்த்தனையை (Essential financial transaction) வருகிற மார்ச் 31, 2026 க்குள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்களுடைய பிபிஎப் மற்றும் எஸ்எஸ்ஒய் அக்கவுண்ட்களை ஆக்டிவ் ஆக வைத்து இருக்க, அதாவது தொடர்ந்து செயலில் வைத்திருக்க, ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்ச தொகையை டெபாசிட் செய்வது கட்டாயம் என்று விதிகள் கூறுகின்றன. ஒரு டெபாசிட்டர் அவ்வாறு செய்ய தவறினால், குறிப்பிட்ட கணக்கு 'செயலற்றதாக' (Inactive) அல்லது 'இயல்புநிலையாக' (Default) மாறக்கூடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
EPFO 3 0 New Update Govt reveals status of CPPS EPF Auto claim settlement EPF account transfer claims
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X