குட்டி பேட்டரி போன்களின் கதை முடிஞ்சது.. 9000mAh பேட்டரி உடன் புது POCO 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ (Poco) நிறுவனத்தின் புதிதா எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் (X8 Pro Series) ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில நாட்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்தபட உள்ளன. இந்த சீரீஸின் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி (POCO X8 Pro 5G) மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி (POCO X8 Pro Max 5G) என்கிற 2 மாடல்கள் மார்ச் 17 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இவ்விரு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட வேகத்தில், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை விவரங்கள் ஆன்லைனில் வெளி வந்துள்ளன. அவைகள் முன்னதாக வெளியான மாடல்களுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க விலை உயர்வை குறிக்கிறது.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் விலை: டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் (@heyitsyogesh) கூற்றுப்படி, இந்தியாவில் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ. 42,000 இல் தொடங்கும். மறுபுறம் உள்ள ஸ்டாண்டர்ட் போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி மாடல் ஆனது ரூ.35,000 என்கிற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்படலாம்.
மேற்கண்ட விலைகள் உண்மையாக இருந்தால், போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக வெளியான மாடலை விட "கணிசமாக" அதிக விலைக்கு இந்தியாவிற்கு வரும். நினைவூட்டும் வண்ணம் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 2025 இல் அறிமுகமானது. அப்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB + 256GB ஆப்ஷன் ரூ.27,999 க்கு வாங்க கிடைத்தது. ஆக புதிய மாடல் ரூ.8000 விலை அதிகரிப்பை காணலாம் என்பது போல் தெரிகிறது.
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸில் உறுதி செய்யப்பட்ட அம்சங்கள்: இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே மார்ச் 17 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜிஆனது 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் மற்றும் 6,500mAh பேட்டரியை கொண்டிருக்கும். அதே வேளையில் ப்ரோ மேக்ஸ் மாடல் 3என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9500எஸ் சிப் மற்றும் 9,000mAh பேட்டரியுடன் வரும்
போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்துள்ள விவரங்களின் படி, போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ரேஷியோ உடனான 6.59-இன்ச் 1.5K TCL M10 OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக ஆப்டிகல் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் IP68 + IP69 + IP69K ரேட்டிங்கையும் பெறலாம் என்று கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது MediaTek Dimensity 8500 Ultra சிப்செட் மூலம் இயக்கப்படலாம், இது Mali-G720 MC8 GPU, LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3 (HyperOS 3) அவுட்-ஆஃப்-தி-பாக்ஸுடன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Wi-Fi 6, Bluetooth 5.4, IR Blaster மற்றும் NFC ஆகிய கனெக்ட்விட்டி ஆதரவுகளையும் பெறலாம்.
கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் Sony IMX882 ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 20-மெகாபிக்சல் OV20B முன்பக்க கேமராவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








