நாளை முதல் SALE.. ரூ.10999 க்கு 5ஜி, 2 நாள் பேட்டரி லைஃப்.. புது POCO போன்.. யாரெல்லாம் நம்பி வாங்கலாம்?
போக்கோ (Poco) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட்-விலை 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமான போக்கோ சி85எக்ஸ் 5ஜிப் (POCO C85x 5G) நாளை (மார்ச் 14) முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரவுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? போக்கோ சி85எக்ஸ் 5ஜி யாருக்கான ஸ்மார்ட்போன் ஆகும்? யாரெல்லாம் வாங்கலாம்? இதோ விவரங்கள்:
போக்கோ சி85எக்ஸ் 5ஜி விலை விவரங்கள்: இந்தியாவில் போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் +128ஜிபி ஆப்ஷன் ரூ.11,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ சி85எக்ஸ் 5ஜி விற்பனை விவரங்கள்: ஷாவ்மீ நிறுவனத்தின் சப்-பிராண்ட் ஆன போக்கோவின் இந்த 5ஜி புதிய ஸ்மார்ட்போன் நாளை (மார்ச் 14 ஆம் தேதி) மதியம் 12 மணி முதல் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். இது பிளாக், கோல்ட் மற்றும் க்ரீன் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
போக்கோ சி85எக்ஸ் 5ஜி யாருக்கான ஸ்மார்ட்போன் ஆகும்? யாரெல்லாம் வாங்கலாம்? இந்த விலை பிரிவில் (அதாவது ரூ.10,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில்) உள்ள ஸ்மார்ட்போன்கள் ஆனது பொதுவாக பெர்ஃபார்மென்ஸை விட பிக் ஸ்க்ரீன் மற்றும் பேட்டரி லைப்பில் கவனம் செலுத்துகின்றன. அதே உத்தியை தான் போக்கோ சி85எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் பின்பற்றுகிறது. உதாரணத்திற்கு ஷாவ்மீயின் இன்னொரு ஸ்மார்ட்போனான ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) மாடலை கூறலாம்
ஆக மெசேஜிங், வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் சோஷியல் மீடியா ஸ்க்ரோலிங் ஆகியவைகள் தான் உங்களுடைய அன்றாட தேவைகளாக இருந்தால், போக்கோ சி85எக்ஸ் 5ஜி உங்களுக்கான ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம். இது நல்ல பேட்டரி லைஃப் மற்றும் பெரிய டிஸ்பிளே சைஸ்ஸை கொண்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வலுவான கேமிங் பெர்ஃபார்மென்ஸை எதிர்பார்த்தால் - வேறு ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம். ஆனால் அதற்காக (அதிக திறன் கொண்ட சிப்செட்களுக்காக) நிச்சயம் கொஞ்சம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
போக்கோ சி85எக்ஸ் 5ஜி முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.9-இன்ச் எச்டி பிளஸ் அடாப்டிவ்சின் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்ப்ளிங் ரேட், 800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகிய அம்சங்களும் உள்ளன. இது TUV ரெயின்லேண்ட் சர்காடியன் பிரென்டலி, லோ ப்ளூ லைட் மற்றும் ப்ளிக்கர் ப்ரீ சான்றிதழ்களையும் பெற்றுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது ஆக்டாகோர் யுனிசாக் டி8300 சிப்செட்டை பேக் செய்கிறது. இது மாலி G57 ஜிபியு, 4ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரையிலான ஸ்டோரேஜ் விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 32-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (10x வரை டிஜிட்டல் ஜூம்) மற்றும் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 6300mAh பேட்டரியை கொண்டுள்ளது. போக்கோவின் கூற்றுப்படி இந்த ஸ்மார்ட்போன் 2 நாட்கள் வரை பேட்டரி பேக்கப்பை வழங்கும். மேலும் இது 15W வயர்டு சார்ஜிங் மற்றும் 7.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. சுமார் 210 கிராம் எடை உள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பை ஓஎஸ் 3, டூயல் சிம் ஆதரவு மற்றும் IP52 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








