புது LPG ரூல்ஸ்.. கட்டாய Aadhaar eKYC குறித்து புதிய விளக்கம்.. யாருக்கெல்லாம் பொருந்தாது, யார் சிக்குவார்கள்?
இந்தியாவில் உள்ள எல்பிஜி (LPG) நுகர்வோர்கள் தொடர்ந்து எரிவாயு சிலிண்டர்களை (Gas cylinder) பெறுவதற்கு ஆதார் அடிப்படையிலான கட்டாய இ-கேஒய்சி (Aadhaar e-KYC) செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (கடந்த மார்ச் 15 அன்று) அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு நுகர்வோர் மத்தியில், குறிப்பாக ஏற்கனவே தங்களது இ-கேஒய்சி செயல்முறையை முடித்திருந்தவர்களிடையே, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. புதிய எல்பிஜி ஆதார் இ-கேஒய்சி விதி (New LPG Aadhaar e-KYC rule) குறித்த குழப்பங்களுக்கு மத்தியில், இதுவரை தங்களது இ-கேஒய்சி செயல்முறையை முடிக்காத எல்பிஜி நுகர்வோர் மட்டுமே அதை செய்ய வேண்டும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

எல்பிஜிக்காக தங்களது பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை (Biometric Aadhaar Verification) ஏற்கனவே முடித்த நுகர்வோர், இந்த செயல்முறையை மீண்டும் செய்ய தேவையில்லை. பிரதம மந்திரி மாதத் திட்டத்தில் (PMUY) சேராத எல்பிஜி வாடிக்கையாளர்களுக்கு இந்த விதி இன்னும் எளிமையானது: எல்பிஜி இணைப்புக்கான இ-கேஒய்சி ஒருமுறை பூர்த்தி செய்யப்பட்டால், அது இன்னமும் செல்லுபடியாகும், அதை மீண்டும் செய்ய தேவையில்லை.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (Pradhan Mantri Ujjwala Yojana) பயனாளிகளுக்கு விதிகள் சற்றே வேறுபட்டவை. இந்த நுகர்வோர், நேரடி பணப்பரிமாற்ற (DBT) எல்பிஜி மானிய பலன்களைத் தொடர்ந்து பெறுவதற்காக, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒருமுறை எல்பிஜி ஆதார் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும்.
பலமுறை சிலிண்டர் நிரப்பிய பிறகு, குறிப்பாக 7வது நிரப்பலுக்கு பிறகு (8வது மற்றும் 9வது நிரப்புதல் சுழற்சி), குறிப்பிட்ட மானிய தகுதிக்காக மட்டுமே இந்த வருடாந்திர சரிபார்ப்பு பொருந்தும் என்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (Ministry of Petroleum and Natural Gas) தெளிவுபடுத்தியுள்ளது.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இ-கேஒய்சி செயல்முறை ஆனது நிலுவையில் இருந்தாலும் கூட, எல்பிஜி சிலிண்டர் விநியோகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் இந்திய அரசாங்கம் உறுதியளித்து உள்ளது. இதன் பொருள், நுகர்வோர் எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து எல்பிஜி சிலிண்டர்களை பெறுவார்கள்.
எல்பிஜி ஆதார் இ-கேஒய்சி-ஐ வீட்டிலிருந்தே எளிதாக செய்யலாம் (LPG Aadhaar e-KYC From Home) என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வழங்கும் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம், எல்பிஜி இ-கேஒய்சி செயல்முறையை வீட்டிலிருந்தே இலவசமாக எளிதாக முடிக்க முடியும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. அதை செய்வது எப்படி? இதை படிப்படியான வழிமுறைகள்:
முதல் படி: அரசாங்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள க்யூ ஆர் குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்யவும் அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்: https://www.pmuy.gov.in/e-kyc.html.
இரண்டாவது படி: ஆதார் ஃபேஸ்ஆர்டி (Aadhaar FaceRD) ஆப் உடன், உங்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் - ஐஓசிஎல் (IOCL), பிபிசிஎல் (BPCL) அல்லது எச்பிசிஎல் (HPCL) - மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்யவும்.
மூன்றாவது படி: நிறுவனத்தின் ஆப்பை திறந்து, ஸ்க்ரீனில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றி, ஆதார் ஃபேஸ்ஆர்டி ஆப்பை (Aadhaar FaceRD App) பயன்படுத்தி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து பயோமெட்ரிக் சரிபார்ப்பை (Biometric Verification) முடிக்கவும்.
நான்காவது படி: சரிபார்ப்பு வெற்றிகரமாக முடிந்த பிறகு, உங்கள் எல்பிஜி (LPG) இணைப்பு அங்கீகரிக்கப்பட்டு, சிஸ்டமில் அப்டேட் (Update) செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








