Home
Mobile

இவ்ளோ கம்மியா வித்தா யாரு விடுவா.. ஆபர் விலையில் 7200mAh பேட்டரி, IP69+ கொண்ட புது iQOO 5ஜி போன்!

ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கி உள்ளது. ஆரம்ப கால் விற்பனையிலேயே, இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் அறிமுக விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனின் மீதான ரூ.2000 தள்ளுபடியை பெறுவது எப்படி? இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன முக்கிய அம்சங்கள் உள்ளன? இதே பட்ஜெட்டில், இப்போதைக்கு வேறு என்ன ஸ்மார்ட்போன்களை வாங்கலாம் அல்லது கருத்தில் கொள்ளலாம்? இதோ விவங்கள்:

ஆபர் விலையில் 7200mAh பேட்டரி, IP69+ கொண்ட புது iQOO 5ஜி போன்!

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.76-இன்ச் (1080 x 2344 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 382 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 1200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் மற்றும் 83 சதவீதம் NTSC கலர் கேமட் ஆகியவற்றை வழங்குகிறது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69+ ரேட்டிங்களுடன் வரும் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் ஆதரவு உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ்6 (OriginOS 6) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 2 வருட ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று ஐக்யூ உறுதியளிக்கிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது 4 என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 டர்போ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.

கேமராக்களை பொருத்தவாரி ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2-மெகாபிக்சல் பொக்கே கேமரா உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமெராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை இது 44W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 7200mAh பேட்டரியை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, டூயல்-பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பிடைப்-சி போர்ட், ஜிபிஎஸ், பைடூ, க்ளோனாஸ், கலிலியோ மற்றும் QZSS ஆகியவற்றை கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை கொண்டுள்ள ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் 166.6×78.4×8.4 மிமீ மற்றும் எடையில் சுமார் 219 கிராம் உள்ளது.

ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி விலை, ஆபர், விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும் வாங்க கிடைக்கிறது

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ஆக்சிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ. 2,000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று ஐக்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக பிரிஸ்மாடிக் கிரீன் மற்றும் டைட்டன் பிளாக் ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்11எஸ் 5ஜி-க்கு பதிலாக வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்?
- மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (Motorola Edge 60 Fusion)
- ரியல்மி பி4கேஸ் 5ஜி (Realme P4x 5G)
- விவோ டி5எக்ஸ் 5ஜி (Vivo T5x 5G)
- மோட்டோ ஜி67 பவர் 5ஜி (Moto G67 Power 5G)
- ஒப்போ கே13 5ஜி (Oppo K13 5G)

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z11x 5G With 7200mAh Battery India Sale Started See Price Offer Alternative Phones to consider
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X