Home
Mobile

அசால்ட் ஆன விலைக்கு முரட்டு 9000mAh பேட்டரி.. Poco X8 Pro Max, Poco X8 Pro அறிமுகம்.. மார்ச் 23 முதல் விற்பனை!

போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்களாக, ஒரே நேரத்தில் மொத்தம் 3 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி (POCO X8 Pro Max 5G) உடன் சேர்த்து போக்கோ எக்ஸ்8 ப்ரோ மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ அயர்ன் மேன் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டுமே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3 கொண்டு இயங்குகின்றன. இரண்டுமே டூயல் சிம் ஸ்மார்ட்போன்கள் ஆகும்.

Poco X8 Pro Max, Poco X8 Pro அறிமுகம்.. மார்ச் 23 முதல் விற்பனை!

போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஆனது 6.83 இன்ச் 1.5கே அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இதில் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 3500 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் மற்றும் 3840 ஹெர்ட்ஸ் PWM டிம்மிங் ஆகியவை அம்சங்கள் உள்ளன.

மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஆனது 6.59-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை, அதே பீக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ரெசல்யூஷன் உடன் பேக் செய்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP66 + IP68 + IP69 + IP69K தரமதிப்பீடுகளுடன் வருவதாக போக்கோ நிறுவனம் கூறுகிறது.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 3என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500எஸ் சிப்செட், 12ஜிபி LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் 512ஜிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. வெப்ப மேலாண்மைக்காக, இந்த ஸ்மார்ட்போனில் 5,800 சதுர மிமீ வெப்ப வெளியேற்றப் பரப்பளவு கொண்ட போக்கோ 3டி ஐஸ் லூப் கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஆனது 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் உடன் வருகிறது. இதிலும் 12ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 256ஜிபி UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. இதில் வெப்பநிலையை கட்டுப்படுத்த, இந்த ஸ்மார்ட்போனில் 5,300 சதுர மிமீ வெப்ப வெளியேற்ற பரப்பளவு கொண்ட கூலிங் சிஸ்டம் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரிஸில் டூயல் ரியர் கேமரா யூனிட்கள் உள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் கூடிய 50-மெகாபிக்சல் (எப்/1.8) பிரைமரி கேமராக்கள் உள்ளன. இவற்றுடன் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராக்கள் இணைக்கப்பட்டு, 120-டிகிரி பீல்ட் ஆப் வியூவை வழங்குகின்றன. முன்பக்கத்தில் 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ப்ரோ மேக்ஸ் மாடலில் 9000mAh பேட்டரியும், ப்ரோ மாடலில் 6500mAh பேட்டரியும் உள்ளன. இந்த இரண்டு போக்கோ ஸ்மார்ட்போன்களிலும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன. ப்ரோ மேக்ஸ் மாடல், மிதமான பயன்பாட்டில் 3 நாட்களுக்கும் மேலான பேட்டரி பேக்கப், 18 நாட்களுக்கும் மேலான ஸ்டாண்ட்பை டைம் அல்லது ஒரே சார்ஜில் சுமார் 30 மணிநேரம் ஆன்லைன் வீடியோக்களை பார்க்கும் வசதி வழங்கும் என்று போக்கோ நிறுவனம் கூறுகிறது.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: போக்கோ எக்ஸ்8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் டாப்-ஆஃப்-லைன் 12GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிங்கிள் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் அயர்ன் மேன் எடிஷன் ரூ.34,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம் உள்ள போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 12GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் ரூ.39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் டாப்-எண்ட் வேரியண்ட் ரூ.43,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விலைகளில் - எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டுகள் மூலம் பெறக்கூடிய வங்கி தள்ளுபடிகள் மற்றும் அறிமுக சலுகைகளும் அடங்கும். இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் வருகிற மார்ச் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X8 Pro Series 3 New 5G Phones Launched in India See Price Specifications Sale From March 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X