பொசுக்குன்னு ரூ.4200 விலை குறைக்கப்பட்ட OPPO 5ஜி போன்.. 7000mAh பேட்டரி, IPX9 ரேட்டிங், 80W சார்ஜிங்!
ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற உங்களுடைய தேடலில் - 5ஜி கனெக்டிவிட்டி, பெரிய பேட்டரி கெப்பாசிட்டி, நல்ல ஐபி ரேட்டிங், தரமான கேமிங் பெர்ஃபார்மென்ஸ் ஆகிய விஷயங்கள் மிகவும் முக்கியமான தேவைகளாக இருந்தால்.. நீங்கள் நேராக செல்ல வேண்டியது பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு தான்!
ஏனென்றால் அங்குதான் - மேலே குறிப்பிட்ட எல்லா தேவைகளிலும் கவனம் செலுத்தும் ஒரு ஸ்மார்ட்போன் அட்டகாசமான ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. அது ஒப்போ கே13 டர்போ 5ஜி (Oppo K13 Turbo 5G) மாடல் ஆகும். இதன் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

ஒப்போ கே13 டர்போ 5ஜி விலை குறைப்பு: தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஒப்போ கே13 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,799 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,799 க்கும் வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் அறிமுகமான போது ஒப்போ கே13 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் வாங்க கிடைத்தது. ஆக 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதுமே ரூ.4200 விலை குறைப்பு கிடைக்கிறது.
ஒப்போ கே13 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.80-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான குளோபல் பிரைட்னஸ் லெவல் ஆகியவற்றை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமென்சிட்டி 8450 மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 3.1 ஆன்-போர்டு ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்களும், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, ஒப்போ கே13 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் செக்கண்டரி மோனோக்ரோம் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 16-மெகாபிக்சல் சென்சார் உள்ளது
இந்த ஸ்மார்ட்போனில் இன்பில்ட் ஃபேன், ஏர் டக்ட்ஸ் மற்றும் 7,000 சதுர மிமீ வேப்பர் கூலிங் சேம்பர் ஆகியவைகள் உள்ளன. இதன் விளைவாக ஒப்போ கே13 டர்போ 5ஜி ஸ்மார்ட்போனால் வெப்பத்தை திறமையாக கட்டுப்படுத்த முடியும் என்று ஒப்போ நிறுவனம் கூறுகிறது.
பேட்டரியை பொறுத்தவரை ஓப்போ கே13 டர்போ ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7000mAh பேட்டரியை கொண்டு உள்ளது. இந்த ஸ்மாட்போன் பைபாஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டு உள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகள் உள்ளான். ஒப்போ நிறுவனத்தின் கூற்றுப்படு இந்த ஸ்மார்ட்போன் நீர் எதிர்ப்பிற்கான IPX6, IPX8 மற்றும் IPX9 ரேட்டிங்களை கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீட்டில் 162.78×77.22×8.31 மிமீ மற்றும் எடையில் 207 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








