மருத்துவ அற்புதம் : இவான்கா டிரம்ப்-ன் கவனத்தை ஈர்த்த இந்திய ஸ்டார்ட்அப்.!

  உங்கள் மனதிற்கு சரியென்று படுவதை தயக்கமின்றி செய்யுங்கள். அதற்கான வெகுமதி பலர் அறிய ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கிடைக்கும். ஆனால் இது கடந்த ஆண்டு நடந்த சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் அமெரிக்க அதிபரின் ஆலோசகரான இவன்கா டிரம்ப் அவர்கள் ராஜலட்சமி பொர்தாக்கூர்ஐ பாராட்டிய போது தான் உண்மையானது.

  மருத்துவ அற்புதம்: இவான்கா டிரம்ப்-கவனத்தை ஈர்த்த இந்திய ஸ்டார்ட்அப்.!

  "அவருடைய மகன் மிக இளைய வயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட போது, உடல்நலத்தை கண்காணிக்க அவரே சொந்தமாக தீர்வை உருவாக்க விரும்பினார்" என ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் அறிவித்தார் இவான்கா. " இவர் கண்டுபிடித்துள்ள ஸ்மார்ட் கையுறை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, பல்வேறு நோய்கள் மற்றும் உடல்நலக் கோளாறுகளை கணிக்க, கண்டறிய , கையாளவல்லது.இவரின் டெராப்ளு நிறுவனத்தின் நோக்கமே இந்தியாவின் தொலைதூர கிராமத்திற்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே. உங்களின் தைரியம் மற்றும் உறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்" என இவான்கா மேலும் கூறினார்.

  "தேஜஸ்க்கு பிறந்தது முதலே வலிப்பு நோய் இருந்த்து, அதை கட்டுப்படுத்த எப்போதும் அவசரகால மருத்துவ சிகிச்சைகள் தேவைப்பட்டன" என்கிறார் பெங்களூரில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனமான டெராப்ளூவின் நிறுவனர் மற்றும் சி.ஈ.ஓ ராஜலட்சுமி. "எனவே அவனை காப்பாற்ற எவ்வளவு சீக்கிரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு நல்லது என அப்போது தான் புரிந்தது" என மேலும் தொடர்ந்தார்.

  மருத்துவ அற்புதம்: இவான்கா டிரம்ப்-கவனத்தை ஈர்த்த இந்திய ஸ்டார்ட்அப்.!

  டெராப்ளு நிறுவனத்தின் தலையாய கண்டுபிடிப்பான டிஜெய் (TJay) வலிப்பு ஏற்படுவதை கண்டறியும் சென்சார்கள் பொறுத்தப்பட்ட பயோமெடிகல் அணிகலன் ஆகும். நோயாளிகளின் ரத்த அழுத்தம்,இதயதுடிப்பு, நாடித்துடிப்பு போன்றவற்றை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், வலிப்பு வருவதை கண்டறிய உதவுகிறது.

  "இதில் இரு முக்கிய பகுதிகள் உள்ளன. டிஜெய் வன்பொருளான இந்த கையுறை உள்ளங்கையில் சிக்னலை பெற்று கிளவுட்டிற்கு நிகழ்நேரத்தில் அனுப்பிவைக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மென்பொருளானது மருத்துவர்கள் முடிவுகளை எடுக்க உதவும் அமைப்பாக செயல்படுகிறது" என்கிறார் ராஜலட்சமி.

  மருத்துவ அற்புதம்: இவான்கா டிரம்ப்-கவனத்தை ஈர்த்த இந்திய ஸ்டார்ட்அப்.!

  இந்த மென்பொருள் மற்றும் வன்பொருளை ஒருங்கிணைப்பதன் மூலம் பின்வருவனவற்றை செய்யமுடியும்.

  1)வலிப்பு வருவதை கண்டறிந்து நோயாளிகளுக்கு முன்கூட்டியே மருத்துவ உதவி செய்தல்

  2)கணிப்புகளின் அடிப்படையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை தவிர்த்து தரவுகளின் அடிப்படையில் சிகிச்சை அளிக்க முடியும்

  3)மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை தொலைதூரத்தில் இருந்தே கண்காணிக்க முடியும். முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதுடன், நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கலாம்.

  உலகம் முழுவதும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 50மில்லியன் மக்களை பாதுகாக்கவும், அவர்களுக்காக அக்கறை எடுத்துக்கொள்ளவும் இது உதவும். ஒரு நிறுவனமாக டெராப்ளூ, ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து இது போன்ற நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ உதவுகிறது என்கிறார்.

  மருத்துவ அற்புதம்: இவான்கா டிரம்ப்-கவனத்தை ஈர்த்த இந்திய ஸ்டார்ட்அப்.!

  சாண்ட் கருவி
  டிஜெய் கருவியை தவிர்த்து, உடல் மற்றும் மன நலனை கண்காணிக்கும் சாண்ட் (Xaant) கருவியியையும் உருவாக்கி வருகிறது டெராப்ளூ. இதன் மூலம் ஒருவருடைய மனநிலை, நகர்வது, ஓய்வு எடுப்பது மற்றும் உறக்க நிலை போன்றவற்றை கண்காணிக்க முடியும்.

  சாண்ட் கருவி மூலம் மனிதனுடைய சுவாச நிலை, இதயத்துடிப்பு, வெப்பநிலை போன்றவற்றின் மூலம் பதற்றநிலையை கண்டறிந்து அமைதிபடுத்த முடியும். மேலும் தொலைதூரத்தில் இருந்து கூட இவற்றை உடனுக்குடன் கண்காணித்து, மன அழுத்தம் போன்ற கோளாறுகளில் இருந்து முன்கூட்டியே காப்பாற்றமுடியும்.

  மருத்துவ அற்புதம்: இவான்கா டிரம்ப்-கவனத்தை ஈர்த்த இந்திய ஸ்டார்ட்அப்.!

  மருத்துவ அற்புதம்
  வெறும் 3 பணியாளர்கள் கொண்ட ஒரு நிறுவனமாக துவங்கப்பட்ட டெராப்ளூ நிறுவனம் தற்போது 20 பணியாளர்களுடன் வலுவாக உள்ளது. மேலும் இதில் மென்பொருள், வன்பொருள், நரம்பியல், வலிப்பியல் என பல்துறை வல்லுநர்களையும் கொண்டுள்ளது.

  இந்தியாவின் புதுமையான நிறுவனங்களில் ஒன்றான டெராப்ளூ, இந்திய அரசிடம் இருந்து ஏராளமான விருதுகள் மற்றும் பாராட்டுகளை பெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேவை வழங்க தங்கள் நாட்டில் நிறுவனத்தை துவங்க பெல்ஜியம் அரசு அழைப்புவிடுத்துள்ளது. கடந்த ஓராண்டில் 3 காப்புரிமைகளை பெற்றுள்ளதாகவும், சில மாதங்களில் மேலும் 2 காப்புரிமையை பெறவுள்ளதாகவும் கூறுகிறார் ராஜலட்சுமி.

  டிஜெய் மற்றும் சாண்ட் கருவிகளை 2018 இறுதிக்குள் சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்தில் மேலும் இரண்டு பொருட்களை டெராப்ளூ வெளியிடும் என தெரிவித்துள்ளனர்.

  Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)

  English summary
  Why this Indian startup caught the attention of Ivanka Trump :Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more