Home
Mobile

சர்ர்னு விலை குறைந்த Samsung போன்கள்.. Galaxy S25 உட்பட ஒரே நேரத்தில் 5 போன்கள் அடிமட்ட விலையில் விற்பனை!

இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் கூட, ஸ்மார்ட்போன்களின் விலைகள் பெரும்பாலும் மேல்நோக்கி செல்லும் நேரத்தில் - சாம்சங் (Samsung) நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல்களை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஒரு அரிய நிம்மதி கிடைத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இப்போது அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் சாம்சங்கின் சொந்த இணையதளம் முழுவதும் குறிப்பிடத்தக்க அளவில், குறைந்த விலையில் விற்பனையாகிறது.

நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனின் விலை, கடந்த பிப்ரவரி 2025-ல் அறிமுகப்படுத்தப்பட்டபோது ரூ.80,999 (256ஜிபி) ஆக இருந்தது. தற்போது பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.56,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட் ரூ.62,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

Galaxy S25 உட்பட ஒரே நேரத்தில் 5 போன்கள் அடிமட்ட விலையில் விற்பனை!

ஹை-எண்ட் 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட் ஆனது அதன் அசல் விலையான ரூ.92,999 க்கு பதிலாக பிளிப்கார்ட்டில் ரூ.74,999 க்கும், சாம்சங் இணையதளத்தில் ரூ.77,999 க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் இணையதளத்தில் ஸ்டாக்கில் இல்லை, ஆனால் பிளிப்கார்ட்டில் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.99,999 க்கு பதிலாக ரூ.72,999 க்கு விற்கப்படுகிறது.

மேற்கண்ட விலை குறைப்புகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்கிறபடியாக, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மற்றும் எஸ்25 எட்ஜ் மாடல்களின் விலையில்தான் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்5 அல்ட்ராவின் பேஸிக் 12ஜிபி + 256ஜிபி வேரியன்ட் இப்போது அமேசானில் சுமார் ரூ.1,00,000 க்கு வாங்க கிடைக்கிறது. அதே நேரத்தில் 12ஜிபி + 512ஜிபி மாடல் சாம்சங்கின் இணையதளத்தில் அறிமுகத்தின்போது இருந்த ரூ.1,41,999 லிருந்து குறைந்து ரூ.1,14,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் மாடலிலும் இதேபோன்ற விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் பேஸிக் 12ஜிபி +256ஜிபி மாடல், அறிமுக விலையான ரூ.1,09,999 லிருந்து தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.79,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதே சமயம், 512ஜிபி மாடல் முந்தைய விலையான ரூ.1,21,999 க்கு பதிலாக ரூ.1,01,999 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கடந்த செப்டம்பர் 2025 இல் ரூ.59,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் விலை, தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.44,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புகள் தற்காலிக தள்ளுபடிகளா அல்லது நிரந்தர குறைப்புகளா என்பது எங்களுக்கு உறுதியாக தெரியவில்லை. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் விரைவாக செயல்படுவது நல்லது.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் ப்ரொடெக்ஷன்
- விஷன் பூஸ்டர்
- 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் டிஸ்பிளே

- எக்ஸினோஸ் 2400 சிப்செட்
- 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 8
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா
- 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 12 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- 45W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 4,900mAh பேட்டரி
- எஸ்24 எப்இ மாடலை விட 10 சதவீதம் பெரிய வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி68 ரேட்டிங்
- அளவீட்டில் 7.4 மிமீ தடிமன்
- எடையில் சுமார் 190 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Price Cut Alert Samsung Galaxy S25 S25 Plus S25 Ultra S25 Edge S25 FE Suddenly Selling At Reduced Rates
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X