ஸ்மார்ட்போன் சேதம்? இனி கவலை இல்லை.. ரூ.201 க்கு ரூ.25000 மொபைல் இன்சூரன்ஸ் கொடுக்கும் Vodafone!
ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் (VIL) ஆனது, அதன் பயனர்களுக்காக ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் உடன் வரும் 2 டேட்டா வவுச்சர்களை வழங்குகிறது என்பது "இன்னமும் பலருக்கும் தெரியாத" ஒரு நன்மையாக உள்ளது.
இதன்கீழ் - ஸ்மார்ட்போனுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் பயனர்களின் பணம் சற்று பாதிக்கப்படும். ஏனென்றால் வோடாபோன் ஐடியா வழங்கும் இந்த இன்சூரன்ஸ்ஸின் காப்பீட்டு மதிப்பு ரூ. 25,000 வரை செல்கிறது. தற்போதைக்கு நுகர்வோருக்கு இந்த காப்பீட்டை வழங்கும் இரண்டு வோடாபோன் ஐடியா வவுச்சர்கள் உள்ளன.

இந்த காப்பீட்டை வழங்குவதற்காக, வோடபோன் ஐடியா நிறுவனமானது மற்றொரு நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். அது காப்பீட்டு நிறுவனம் ஆன ஆதித்யா பிர்லா குழுமத்திற்கு (ABG) சொந்தமான ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் (ABHICL) ஆகும். இவ்விரு நிறுவனங்களும் அதன் நுகர்வோருக்கு ஹேண்ட்செட் காப்பீட்டை வழங்கும் டேட்டா வவுச்சர்களின் விலை ரூ. 251 மற்றும் ரூ. 201 ஆகும்.
வோடபோன் ஐடியாவின் ரூ. 201 டேட்டா வவுச்சரின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: இது 10ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இது சேவைக்கான செல்லுபடியாகும் காலம் அல்ல, வவுச்சருடன் வழங்கப்படும் டேட்டாவிற்கான தனிப்பட்ட செல்லுபடியாகும் காலம் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இந்தத் திட்டத்தின் மூலம், பயனர்கள் ABHICL-இடமிருந்து தங்கள் ஸ்மார்ட்போனுக்கு ரூ.25,000 வரையிலான இன்சூரன்ஸை பெறுகிறார்கள். ஸ்மார்ட்போனின் நிகழ்நேர காப்பீட்டு மதிப்பை பெற, காப்பீட்டு கூட்டாளரிடமிருந்து எஸ்எம்எஸ்-ஐ பெற்ற 48 மணி நேரத்திற்குள் பயனர்கள் ABHICL-இல் பதிவு செய்ய வேண்டும்.
வோடபோன் ஐடியாவின் ரூ. 251 டேட்டா வவுச்சரின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: வி-யின் ரூ.251 டேட்டா வவுச்சர் ஆனது 10ஜிபி டேட்டாவுடன் வருகிறது, மேலும் இந்த வவுச்சரும் 30 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழும் மஸ்மார்ட்போனுக்கான காப்பீட்டு மதிப்பும் ரூ. 25,000 வரை கிடைக்கும்
மேலும் ரூ.201 மற்றும் ரூ.251 டேட்டா வவுச்சர்களுக்கு இடையிலான வித்தியாசம் என்னவென்றால், வழங்கப்படும் காப்பீடு வெவ்வேறு கால அளவுகளுக்கு வழங்கப்படுகிறது. ரூ.251 திட்டத்தில், காப்பீட்டு வரம்பு நீண்ட காலத்திற்கு உள்ளது, மேலும் இதற்கு மாதத்திற்கு ரூ.21 செலவாகும், அதேசமயம் ரூ.201 டேட்டா வவுச்சரில் இது குறுகிய காலமாக உள்ளது, மேலும் இதற்கு மாதத்திற்கு ரூ. 34 செலவாகும்.
சமீபத்தில் வி நிறுவனமானது நார்டன் மொபைல் செக்யூரிட்டி (Norton Mobile Security) சேவைக்கான இலவச சந்தாவையும் அறிவித்திருந்தது. இந்த சேவைக்கான 1 வருட சந்தா, தற்போது வோடபோன் ஐடியாவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் (Vodafone Idea Rs 499 Prepaid Plan) கீழ் அணுக கிடைக்கிறது.
தற்போது இந்த துறையில் (இந்திய டெலிகாம் துறையில்) நுகர்வோருக்கு மொபைல் பாதுகாப்பு சேவையை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் - வி என்கிற வோடபோன் ஐடியா மட்டுமே ஆகும்என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது, அதாவது எந்தவொரு ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டத்தின் கீழும் இப்படி ஒரு நன்மை கிடைக்கவில்லை.
வோடபோன் ஐடியாவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் விரிவான நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் 20 ஜிபி டேட்டா மற்றும் 1 வருட வேலிடிட்டி உடன் வருகிறது. கூடுதலாக இது ஒரு வருடத்திற்கான நார்டன் மொபைல் செக்யூரிட்டி கவரேஜையும் வழங்குகிறது
நார்டனின் அதிகாரப்பூர்வ இணையதளம் இதே பாதுகாப்பு திட்டத்தை ஒரு வருடத்திற்கு ரூ.699 க்கு விற்பனை செய்கிறது. ரூ.1,399 க்கு இரண்டு வருட பேக்கேஜும் உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாடிக்கையாளர்கள் ஆகிய இருவருக்குமே இதே விலை பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








