பக்கா பட்ஜெட்டில் புது Realme போன்.. 6300mAh பேட்டரி, மிலிட்டரி கிரேட் பாதுகாப்பு.. எந்த மாடல்?
இந்தியாவில், ரியல்மி (Realme) நிறுவனம் கூடிய விரைவில் ஒரு புதிய சி-சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அது ரியல்மி சி81 (Realme C81) மாடல் ஆக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆக பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 4ஜி ஸ்மார்ட்போனை வாங்க காத்திருப்பவர்கள், இன்னும் சிறுது காலம் காத்திருக்கலாம்.
91மொபைல்ஸ் வலைதளத்தின் சமீபத்திய அறிக்கையின் படி, ரியல்மி சி81 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள், கலர் ஆப்ஷன்கள் மற்றும் சில முக்கிய அம்சங்கள் லீக் ஆகி உள்ளது. இது - ரியல்மி சி81 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீடு விரைவில் வரக்கூடும் என்பதை குறிக்கிறது.

ரியல்மி சி-சீரிஸ் மாடல்கள் ஆனது நீண்ட காலமாக பட்ஜெட் பிரிவினரை இலக்காக கொண்டு, பெரிய டிஸ்பிளேக்கள், பெரிய பேட்டரிகள் மற்றும் மலிவு விலை போன்ற அத்தியாவசிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது. சி81 மாடலில், இந்த பிராண்ட் அதே உத்தியை தொடர்வதோடு, நீடித்து உழைக்கும் தன்மையை மையமாகக் கொண்ட சில மேம்படுத்தல்களையும் சேர்ப்பதாக தெரிகிறது.
ரியல்மி சி81 ஸ்டோரேஜ் மற்றும் கலர் ஆப்ஷன்கள்: தொழில்துறை வட்டாரங்கள் பகிர்ந்த பட்டியலின்படி, ரியல்மி சி81 ஆனது RMX5388 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளது. இந்த போன் 4GB + 64GB மற்றும் 4GB + 128GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகளில் வரக்கூடும். கிளேசியர் ப்ளூ ஏசியா மற்றும் ஸ்டார்ம் பிளாக் ஏசியா ஆகிய கலர் ஆப்ஷன்களும் எதிர்பார்க்கப்படுகிறது
ரியல்மி சி81 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்த ஸ்மார்ட்போன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் போன்ற சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ரியல்மி நோட் 80 மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரே மாதிரியான அம்சங்களுடன் வேறு பெயரின் கீழ் இங்கே அறிமுகம் செய்யப்படலாம்.
ஆக ரியல்மி சி81 ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 563 நிட்ஸ் வரை ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். மேலும் இது 4ஜிபி ரேம் உடன் யூனிசாக் T7250 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி UI உடன் வெளியாகலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, இது 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவை பேக் செய்யலாம். பேட்டரியை பொறுத்தவரை, இது 15W சார்ஜிங்குடன் 6,300mAh பேட்டரியை பேக் செய்யலாம். கடைசியாக இது MIL-STD-810H ராணுவ தரத்திலான ட்யூரபிலிட்டியை வழங்கலாம்.
மேற்கண்ட அம்சங்கள், வெறும் செயல்திறனை விட நம்பகத்தன்மை மற்றும் நீடித்துழைப்பில் அதிக கவனம் செலுத்தும் ஒரு ஸ்மார்ட்போனை சுட்டிக்காட்டுகின்றன: முக்கியமாக பெரிய 6,300mAh பேட்டரி, 90Hz டிஸ்பிளே மற்றும் கூடுதல் ட்யூரபிலிட்டிசான்றிதழ் ஆகிய அம்சங்களால் - இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலைப்பிரிவில் தனித்து நிற்கக்கூடும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரியல்மி நிறுவனம் அதன் சி81 ஸ்மார்ட்போனை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இது உண்மையிலேயே விரைவில் அறிமுகமாகிறது என்றால், நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட பட்ஜெட் போன், கன்டென்ட்களை பார்ப்பதற்கு பெரிய டிஸ்பிளே மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு நீடித்துழைக்கும் டிவைஸ் ஆகியவற்றை நீங்கள் விரும்பினால், இந்த ஸ்மார்ட்போன் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
ஆனால், நீங்கள் செயல்திறன் அல்லது கேமிங்கிற்கு முன்னுரிமை அளித்தால், சிறந்த கேமரா திறன்களை எதிர்பார்த்தால், மற்றும் வேகமான சார்ஜிங் வேகத்தை விரும்பினால், மாற்று போன்களைப் பரிசீலிக்கலாம். ஏற்கனவே பட்ஜெட் போன் அல்லது ரியல்மி சி-சீரிஸ் போன் வைத்திருப்பவர்கள், மேற்கண்ட மேம்படுத்தல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா என்பதை பார்த்துவிட்டு, பின்னர் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








