ஆளுக்கு 1 அள்ளு.. ஏப்.24 முதல் SALE.. ரூ.11000 பட்ஜெட்டில் 2 புது Redmi போன்கள்.. 6300mAh பேட்டரி, IP52!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி (Redmi) நிறுவனமானது, இந்திய சந்தையில் 2 புதிய பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவைகள் ரெட்மி ஏ7 4ஜி (Redmi A7 4G) மற்றும் ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி (Redmi A7 Pro 4G) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி ஏ7 ப்ரோ 5ஜி ( REDMI A7 Pro 5G) மாடலின் கீழ் 4ஜி வேரியண்ட்களாக, ரெட்மி ஏ7 சீரீஸின் கீழ் அமர்கின்றன. என்ன விலை? என்ன அம்சஙகள்? எப்போது முதல் விற்பனை? என்ன ஆபர்? இதோ விவரங்கள்:

என்னென்ன அம்சங்கள்? ரெட்மி ஏ7 ப்ரோ மாடலில் 6.9-இன்ச் (1600 x 720 பிக்சல்ஸ்) எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உடன், TÜV ரைன்லேண்ட் லோ ப்ளூ லைட், TÜV ரைன்லேண்ட் சர்க்காடியன் ஃப்ரெண்ட்லி, TÜV ரைன்லேண்ட் ஃப்ளிக்கர் ஃப்ரீ, டிசி டிம்மிங்) உள்ளது.
ரெட்மி ஏ7 மாடலில் 6.88-இன்ச் (1600 x 720 பிக்சல்ஸ்) எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே (120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட்) உள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இரண்டுமே மாலி-G57 MP1 ஜிபியு உடனான 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் யுனிசாக் T7250 12என்எம் சிப்செட் உள்ளது
இரண்டுமே 3ஜிபி / 4ஜிபி LPDDR4X ரேம், 64ஜிபி UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் 2டிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரி உடன் வருகின்றன. இரண்டுமே டூயல் சிம் (நானோ + நானோ + மைக்ரோஎஸ்டி) ஆதரவை வழங்குகின்றன.
ஆனால் ஓஎஸ்-ல் வேறுபாட்டை கொண்டுள்ளன. ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போன் ஆனது சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 உடன் (ஆண்ட்ராய்டு 15) வருகிறது, மறுகையில் உள்ள ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 உடன் (ஆண்ட்ராய்டு 16) வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ7 4ஜி மற்றும் ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஆகிய இரண்டுமே எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13எம்பி ரியர் கேமரா, இரண்டாம் நிலை கேமரா, எல்இடி ஃபிளாஷை கொண்டுள்ளன, முன்பக்கத்தில் எப்/2.0 அபெர்க்ஷர் கொண்ட 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
3.5மிமீ ஆடியோ ஜாக், எப்எம்ரேடியோ, கீழ்ப்புறத்தில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்ற பொதுவான அம்சங்களுடன் வந்தாலும் அளவீடுகளில் சில வேறுபாடுகளை கொண்டுள்ளன. ரெட்மி ஏ7ஆனது 171.79×79.77×8.26மிமீ மற்றும் 193 கிராம் எடையை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மி ஏ7 ப்ரோ ஆனது 171.56×79.47×8.15 மிமீ மற்றும் 208 கிராம் எடையை கொண்டுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற பொதுவான அம்சங்களை பொறுத்தவரை தூசி மற்றும் நீர் தெறிப்பு எதிர்ப்பிற்கான IP52 ரேட்டிங் உடன் வருகின்றன. மேலும் டூயல் 4G வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி 2.4GHz/5GHz, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.
கடைசியாக பேட்டரி. இதிலும் முக்கிய வேறுபாடு உள்ளது. ரெட்மி ஏ7 4ஜி மற்றும் ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே 15W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வந்தாலும், ரெட்மி ஏ7 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5200mAh பேட்டரியை கொண்டுள்ளது. ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6300mAh பேட்டரியை கொண்டுள்ளது.
விலை, விற்பனை, ஆபர்: ரெட்மி ஏ7 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மி ஏ7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் - ஒரு குறிப்பிட்ட கால சலுகையின் ஒரு பகுதி என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இரண்டுமே வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் எம்ஐ.காம் (mi.com), பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








